நாளை உலக யோகா தினம் என்ற பெயரில் மிகப் பெரிய அணி திரட்டல் வேலையை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.
ஜூன் மாதம் இருபத்தி ஒன்றாம் நாளை ஏன் யோகா தினமாக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதன் மர்மத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணா தனது முகநூல் பக்கத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவரின் நினைவு நாளாம் நாளை. அதை இந்தியாவே அனுசரிக்கும்படி யோகா தினமாக மாற்றி விட்டார்கள்.
என்ன ஒரு வில்லத்தனம்?
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பதினைந்து நவம்பர் என்பது நாதுராம் கோட்சே தூக்கிலடப்பட்ட நாள். அன்று கூட ஏதாவது ஒரு அரசு தினத்தை மோடி அரசு அறிமுகம் செய்யக்கூடும்.
பேயரசு ஆட்சி செய்தால் வேறு என்ன நடக்கும்?
ஐடியா குடுத்திட்டீயே தல, செஞ்சிடுவானுங்க
ReplyDeleteஇப்படியுமா
ReplyDeleteadangkoyyaala pinnaniyila ivvalvu irukkutha.
ReplyDeletethakavalukku nandri sir.
காங்கிரஸ் ஆட்சியில் எல்லாத்துக்கும் நேரு, இந்திரா, ராஜீவ் என்று பெயர் சூட்டினார்கள். பாஜகா அவர்கள் நம்பும் தலைவர்களின் நாட்களைப் புரொமோட் செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? இதுக்கெல்லாம், 'பேயரசு' என்று சொல்வது நியாயமாகத் தெரியவில்லை.
ReplyDeleteஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது சார். காங்கிரஸ் ஆட்சியில் நேரு, இந்திரா, ராஜீவ் பெயரில் திட்டங்கள், தினங்கள் வெளிப்படையாக இருந்தது. இவர்கள் செய்வது திருட்டுத்தனமாக இருக்கிறது. சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜின் அப்பா, பாக்யராஜை "எதை எடுத்தாலும் ஒரு திருட்டுத்தனம், எல்லாத்திலயும் ஒரு மொள்ளமாரித்தனம்" என்று திட்டுவார். அது நூற்றுக்கு நூறு இந்த அரசுக்கு பொருந்தும்
Delete