Wednesday, July 2, 2014

கீழ்மட்டத்திலாவது இந்த பண்பாடு உள்ளதே!

இன்று திருவண்ணாமலையில் ஒரு திருமணம். மணமகன் எங்கள்
தோழரின் உறவினர். மணமகனை வாழ்த்த வரிசையில் நின்ற போது
பார்த்த சுவாரஸ்யமான காட்சி. ஒருவர் மண மகனுக்கு மொய்கவரை
கொடுத்த போது அதில் இருந்த ஜெயலலிதா படமும் கேமராவிற்கு
தெரிவதை உறுதி செய்து கொண்டார். அடுத்து வந்தவரும் அது 
போலவே செய்தார். அவர் கவரில் இருந்தது மருத்துவர் ஐயா படம்
மண மகனின் தந்தை திமுக பொறுப்பாளர்.

திமுக காரர்கள் கல்யாணத்திற்கு அதிமுககாரர்கள் செல்வது
என்பது  மேல்மட்ட அளவில் மிகப் பெரிய துரோகமாக பார்க்கப்
படுகிற சூழலில் கீழ்மட்ட அளவிலாவது அப்படி இல்லாமல்
இருப்பது பாராட்டத்தக்கது
 

2 comments:

  1. வணக்கம்
    திருமணவீட்டிலும் கட்சிகள் வந்துத்துப்போல......
    என்பக்கம் கவிதையாக

    நீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்




    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-


    ReplyDelete
  2. நட்பே பெரிதென்று வந்தோரைப் பாராட்டுவோம்

    ReplyDelete