Friday, July 11, 2014

அருண் ஜெய்ட்லிக்கும் மோடிக்கும் நாடெங்கிலும் ஓர் எச்சரிக்கை

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தப் போவதாக நேற்றைய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்
ஜெய்ட்லீ அறிவித்ததைக் கண்டித்தும் தேசத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை அமலாக்கக் கூடாது என்று வற்புறுத்தியும் இந்திய மக்களின் சேமிப்பை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியோடு நாடு முழுதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் சில புகைப்படங்கள் கீழே. முகநூலில் எனது நட்பு வட்டத்தில் உள்ள சிலர் பதிவு செய்த படங்கள் மட்டுமே.

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ஒரே முழக்கம்தான்.

மத்தியரசே இன்சூரன்ஸ்துறையை சீரழிக்காதே.

இந்தியா முழுதிலுமிருக்கிற இன்சூரன்ஸ் ஊழியர்கள் மத்தியரசிற்கு எதிராக போராட்ட களம் புகுந்து விட்டனர் என்ற எச்சரிக்கையை மோடியும் ஜெய்ட்லியும் புரிந்து கொண்டால் அவர்களுக்கு நலன் பயக்கும்  






























4 comments:

  1. Insurance and Banking sector should not be touched by outsiders. we have enough resources to improve. but who care ??? i am afraid this time you cannot stop this !!!.

    Seshan/ Dubai

    ReplyDelete
  2. போராட்டம் வெல்லட்டும்

    ReplyDelete
  3. Vellorella porattame nadakalla pola

    ReplyDelete
  4. மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்காத அறிவு கெட்ட அனானி, காமாலைக் கண்ணாடியைக் கழட்டிட்டு கடைசி மூன்று போட்டோவை நல்லா பாரு.

    ReplyDelete