எழுபத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கிடையாது
என்று முடிவு செய்த மோடி அரசு இப்போது நியமித்துள்ள ஐந்து ஆளுனர்களில் குறைவான
வயதுடையவரே எழுபத்தி எட்டு வயது தாத்தாதான்.அமைச்சர்களை நியமிப்பதற்கான உரிமை முழுக்க முழுக்க பிரதமருடையது என்றாலும் மோடியின் லாஜிக் என்னவென்று புரியவே இல்லை.
எழுபத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவரால் அமைச்சராக செயல்பட முடியாது என்றால் ஆளுனராக மட்டும் செயல்பட முடியுமா?
அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்ட சில தாத்தாக்களை கழட்டி விட எழுபத்தி ஐந்து வயது என்று தேவைப்பட்டது. கட்சியில் இருந்து குடைச்சல் கொடுக்க வாய்ப்புள்ள தாத்தாக்களை ஆளுனராக அனுப்பியாகி விட்டது.
ஆட்டின் தாடிதானே கறுப்பாய் இருந்தால் என்ன? நரைத்துப் போனால் என்ன? என்பது மோடியின் எண்ணம் போலும்!
I don't understand your logic ! A minister should be active and energetic but Governors are not active in day to day administration of the state.
ReplyDeleteRaj Bhavans are not Old Age Homes My Dear Friend. Either we should abolish that post or it should be with proper persons. But both Congress & BJP use them as a dumping yard
ReplyDelete