Thursday, July 10, 2014

அருண் ஜெய்ட்லி கொடுத்த ஐந்து லட்ச ரூபாய் அல்வா

 http://static.dnaindia.com/sites/default/files/2014/04/07/225573-arun-jaitley.jpg

மோடி ஜபம் செய்த மத்தியதர ஊழியர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக அளித்த வாக்குறுதியான ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் என்று பாவம் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

குறைந்தபட்சம் மூன்று லட்ச ரூபாயாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வேறு இருந்தது. ஆனால் மிகச் சிறந்த முறையில் அருண் ஜெய்ட்லி அவர்களுக்கு அல்வா கொடுத்து விட்டார்.

பெட்ரோலியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்ததன் மூலம் அம்பானிகளும் அதானிகளும் கோடிக்கணக்கில் லாபமீட்டுவார்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல் இதற்கே புளகாங்கிதம் அடைகிற இந்த மத்தியதர மக்களின் பெருந்தன்மைதான் மோடிக்கு ஒரு பெரிய வரம்.

4 comments:

  1. ஆமாம் நண்பரே, ஐந்து இலட்சம் இரண்டரை இலட்சமாகிவிட்டது

    ReplyDelete
  2. BUT Not only in BJP’s election manifesto, but the present Finance Minister Mr Arun Jaitley himself seriously reiterated and demanded just two months back in an election rally (widely publicized) to increase the IT ceiling to Rs.5 lakh. And he gave a brilliant rationale behind his demand.

    "Raise IT slab from Rs 2 lakh to Rs 5 lakh, demands Arun Jaitley.
    By PTI | 20 Apr, 2014, 09.42PM IST.

    AMRITSAR: BJP leader Arun Jaitley today demanded a raise in the Income Tax ceiling from Rs two lakh to Rs five lakh, which he claimed will benefit thirty million people.

    Advocating low tax structure, the BJP leader said, "Direct Tax should be reduced. If the Income Tax limit is raised from Rs 2 lakhs to Rs 5 lakhs, 3 crore people will save Rs 24 crore which will lead to a small impact of 1 to 1.5 per cent of National Tax Fund."

    Jaitley said,"the savings of Rs 24 crore in the pockets of ordinary person by reducing ceiling on Income Tax will lead to increased purchase which in turn will lead to increased VAT and Excise Duty thereby increasing the Revenue".

    Read more at:
    http://economictimes.indiatimes.com/articleshow/34013531.cms?intenttarget=no&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst.

    ReplyDelete
  3. நண்பர்களே ஜெட்லி சொன்னது இருக்கட்டும், நாங்கள் ஆட்சியமைத்தால், வெளிநாட்டிலிருக்கும் கருப்புப்பணத்தை கொண்டு வந்து எவ்வித வரிகளும் பொது மக்களிடத்தே வசூலிக்கமாட்டேர்ம் என்றும் வரிவிதிப்பை சுலபமாக்குவோம் என்று ஆட்சியமைத்தவுடன் ஊரெல்லாம் முழங்கிவிட்டு ஆம் ஆத்மியை காங்கிரஸின் இரண்டாம் அணி என்று ஏளனமிட்டுவிட்டு இன்று காங்கிரஸின் முதலணியாய் திகழ்கின்றனர் பாஜாக

    ReplyDelete
  4. ஆரம்பமே சறுக்கல் !

    ReplyDelete