Tuesday, July 15, 2014

இவர் போல வேறு யார்?




வாழும் வரலாறு அவர்.

அவர் அடைபட்டதால்
சிறைக்குப் பெருமை.

தன் வீடு, தன் சுகம்
என்றெல்லாம் 
பொழுதளந்தவர் மத்தியில்

விடுதலை முழக்கத்திற்காய்,
உழைப்பவர் உரிமைக்காய்

கம்பிகளின் பின்னே
தன் காலத்தைக் கழித்தவர்.

எளிமையின் உதாரணம்,
தியாகத்தின் அடையாளம்,
மார்க்சியத்திற்கு வழிகாட்டி,

சிலிர்க்க வைக்கும்
சிங்கக் குரலின்
சொந்தக்காரர்.

இளைய தலைமுறைக்கு
எழுச்சியூட்டும்
இனிய தலைவர்.


என்றைக்கும் எங்கள்
அன்புத் தோழர்
என்.எஸ்
என்றென்றும் 
ஆரோக்கியமாய் வாழியவே


இன்று 93 வது பிறந்த நாள் கொண்டாடும் எங்கள்  மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் வேலூர் கோட்ட அலுவலகத்தில்  ஒரு கூட்டத்தில் ப்ங்கேற்ற போதும், 2006 சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் அவரிடம் தேர்தல் நிதி அளித்த போதும்  எடுத்த புகைப்படங்கள் கீழே உள்ளது.








 

5 comments:

  1. neenga police-kaar madhiri irukkinga last photo-la!

    ReplyDelete
  2. என் தொந்தி உனக்கு போலீஸ் போல தோன்றியதில் தவறில்லை. ஆனால் நீ உன் முகத்தைக் காட்டினால்தானே " நீ எம்ஜியார் போல தகதகவென்று மின்னுகிறாயா இல்லை கறுப்பா பயங்கரமா இருக்கியா என்று தெரியும்

    ReplyDelete
  3. aiya ariv(usooniyam)ay! naan sonnathu mariyadayag?
    aanaal KAAMRED-nu solra nee(nga) solradhu "NEE ,UN,KARUPPAA, BAYANGARAMAA"
    Nalla Panbu!!!!!

    ReplyDelete
  4. வார்த்தையில் மரியாதை இருந்தது அனானி, ஆனால் விஷயத்தில்? அதுவல்லவா மிகவும் முக்கியம். முகம் காட்ட மறுப்பதே மரியாதைக்குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள் மதிப்பிற்குரிய அனானி அவர்களே

    ReplyDelete
  5. Purindhukondamaikku nandri sir!
    Naan blog writter illey, reader, enakku id create panna theriyathu(promise)
    adhanaal mugam kattavailley! aanaal yennam(karuthu) eluthalaaam-thaney?

    ReplyDelete