சச்சின் வெறியர்கள் சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை என்றுதான்
இந்த பதிவை எழுதுகிறேன்.
மரியா ஷரபோவா சச்சின் டெண்டுல்கர் பற்றி தனக்கு தெரியாது என்று
சொன்னது அவ்வளவு பெரிய குற்றமா குற்றமா என்ன? இல்லை
உலகில் உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டே
ஆக வேண்டிய அளவிற்கு சச்சின் என்ன அவ்வளவு பெரிய மனிதரா?
விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிற
கிரிக்கெட் வீரர் பற்றி உலகில் உள்ள இதர விளையாட்டுத்துறை
வீரர்கள் அவசியம் கேள்விப்பட்டிருக்க வேண்டுமா என்ன? மரியா
தனக்கு தெரியாது என்று சொன்னதில் சச்சினுக்கு அப்படி என்ன
இழுக்கு வந்து விட்டது?
ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். உலகில் உள்ள அனைத்து
விளையாட்டு வீரர்களையும் சச்சின் அறிவாரா? ஒலிம்பிக்
பந்தயங்களில் தங்க மெடல் வாங்கியவர்களின் பெயர்கள் அவருக்கு
தெரியுமா என்ன?
சரி இந்தியாவில் உள்ள நூற்றி முப்பது கோடி மக்களும்
சச்சின் பற்றி அறிவார்களா?
இது ஒரு விஷயம் என்று சச்சின் வெறியர்கள் மரியா ஷரபோவாவின்
முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிற கமெண்டுகள் அசிங்கமாகவும்
சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது. இந்த அற்பனத்தனத்தை
அந்த பெரிய மனிதரும் கண்டித்ததாக தெரியவில்லை.
கிரிக்கெட் என்பது இப்போது விளையாட்டில்லை. ஊடகங்கள்
உருவாக்கியிருக்கிற ஒரு சந்தை. அந்த சந்தையில் விற்கப்படுகிற
காஸ்ட்லி பிராண்ட் பொருள் சச்சின். அவ்வளவுதான்.
இதற்கு இவ்வளவு உணர்ச்சியெல்லாம் அவசியமில்லை.
இந்த உணர்ச்சி வேகத்தை ரயில் கட்டண உயர்விற்கோ அல்லது
பெட் ரோல் டீசல் விலை உயர்வுக்கோ எதிராக காண்பித்திருக்கலாம்.
ஆனால் அதற்கெல்லாம் மறியல் நடத்தி காவல்துறையிடம்
தடியடி வாங்கி சிறைக்குப் போக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தொண்டர்களும் வாலிபர் சங்கத் தோழர்களும் மாணவர் சங்க,
மாதர் சங்கத் தோழர்களும் இருக்கிறார்களே!
கிரிக்கெட் சூதாட்டத்தில் போகாத இந்திய கிரிக்கெட்டின் மானம்
மரியா ஷரபோவா சொன்னதில்தான் போயிருக்கிறது போல.
அண்ணா!
ReplyDeleteமரியா ஷரபோவா- இவர் யாருங்க! சில நாட்களாக தமிழ் மணத்தில் அடிபடும் பெயர் நமக்கு யாரெனத் தெரியாது.தமிழ்படத்தின் புதுக் கதாநாயகியா?
உலகில் உள்ள 194 நாடுகளில் 10 நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகின்ற விளையாட்டு கிரிக்கெட், ஆனால் போட்டியின் பெயர் மட்டும் உலக கோப்பை போட்டி.
ReplyDeleteஅருமையான பதிவு. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு பக்கிரிசாமி
ReplyDeleteஜெயகுமார் சார், ஒரு வேளை ஏராளமான நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டால் கிரிக்கெட்டிலும் இந்தியா காணாமல் போய் விடுமோ?
ReplyDeleteஅதானே யோகனுக்கு மரியா ஷரபோவா று தெரியவில்லை. அதற்காக யோகனை மரியாவின் ரசிகர்கள் தாக்கி விடுவார்களா என்ன?
ReplyDeletemaria sharapova mela engalukku entha kovammum illa ana ava venum endre
ReplyDeletesachina theryadunu sollra,now she know who is sachin,who have more fans
வாங்க அனானி, கோபம் இல்லாமதான் அவங்க சுவத்தில கழுவி கழுவி ஊத்தினீங்களா?
ReplyDeleteசரி சச்சினுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கீங்கன்னு மரியாவிற்கு உணர்த்தி என்ன சாதிச்சுட்டீங்க? சில திரைப்பட ரசிகர்மன்றங்கள் கூட எப்பயாவது உருப்படியா ரத்த தானம், நோட்டு புக்கு கொடுப்பது என்று ஏதாவது செய்யும். நீங்க என்ன செஞ்சிருக்கீங்க. அந்தாளு கோடி கோடியா சம்பாதிக்க ஏற்பாடு செஞ்சிருக்கீங்க
ReplyDeleteகை குடுங்க சார்,
ReplyDeleteநான் மனதில் எண்ணியிருந்ததை அப்படியே எழுதி விட்டீர்கள்.
சச்சின் என்ன மாபெரும் மனிதரா? அவரை எல்லோருக்கும் தெரிந்தே இருக்கவேண்டுமா? சச்சின் என்றால் எனக்கு முதலில் தோன்றுவது சச்சின் தேவ் பர்மன் என்ற இசையமைப்பாளர்தான். மரியா ஷரபோவா சொன்னதில் எதுவும் தவறில்லை. இந்த கிரிக்கெட் வியாபாரிகளின் வாடிக்கையாளர்கள் செய்யும் அலப்பரை தாங்கமுடியவில்லை. இந்த நிகழ்வு கிரிக்கெட்டை இன்னும் காட்டமாக விமர்சனம் செய்யத் தூண்டுகிறது.
(கிரிக்கெட் என்பது இப்போது விளையாட்டில்லை. ஊடகங்கள்
உருவாக்கியிருக்கிற ஒரு சந்தை. அந்த சந்தையில் விற்கப்படுகிற
காஸ்ட்லி பிராண்ட் பொருள் சச்சின். அவ்வளவுதான். )
மிகச் சரியான கருத்து.
வாழ்த்துக்கள். சில சச்சின் ரசிகர்கள் கோபத்தில் கொப்பளித்தாலும் உண்மை அவரை உலகில் பலருக்கு தெரியாது என்பதே.
Ferrari car'ku tax katta vakkatha thirrutu paiyaluku itthana jalranga.
ReplyDeleteநன்றி காரீகன், கடுமையான விமர்சனத்திற்கு இங்கே பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்த்தேன். தாங்கள் செய்தது அபத்தம்
ReplyDeleteஎன்று உணர்ந்ததாலோ என்னவோ அடக்கியே வாசிக்கிறார்கள்
super top
ReplyDelete