Sunday, July 13, 2014

கால்பந்திற்கு இழப்புதான். ஆனால்




உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடக்கும் இந்நாளில் இத்தகவலை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் கல்லூரி நாட்களில் மிகச் சிறந்த கால்பந்து வீரராக பெங்களூர் பல்கலைக் கழக கால்பந்து அணியின் தலைவராக இருந்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த கால்பந்து அணியான கல்கத்தா முகமதன் ஸ்போர்ட்டிங் அணியில் விளையாடவும் தேர்வு செய்யப்பட்டார். 

அப்போது எல்.ஐ.சி யிலும் வேலை கிடைக்க அவரது தந்தை எல்.ஐ.சி வேலையில் சேருமாறு ஆலோசனையளிக்க அவரும் அதை ஏற்று எல்.ஐ.சி உதவியாளராக பணியில் சேர்கிறார். தன்னை சங்கத்தில் இணைத்துக் கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் தொழிற்சங்கப் பணியில் வேகம் காண்பிக்க பெங்களூர் கோட்ட பொதுச்செயலாளர், பிறகு தென் மத்திய மண்டலத் தலைவர், அகில இந்திய இணைச்செயலாளர் பின்பு 2007ல் கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் இப்போதும் தொடர்கிறார்.



தெளிவான சிந்தனை, ஆழ்ந்த ஞானம், உழைப்பாளி மக்கள் மீதான் ஆர்வம், இயக்கம் மீது பற்று, இடதுசாரிக் கொள்கைகள் மீதான நம்பிக்கை என்று நடைபோடும் அற்புதத் தலைவர். அவரது உரையைக் கேட்பதே ஒரு ஆனந்தமான அனுபவம். அதிலும் உருதுக் கவிதைகளைச் சொல்லி அதற்கான அர்த்தத்தை ஆங்கிலத்திலும் சொல்லி அப்படியே நம்மை பரவசத்தில் ஆழ்த்திடுவார்.

கால்பந்து விளையாட்டிற்கு இழப்பானாலும் கூட இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கு கிடைத்த ஒரு நல்முத்து தோழர் அமானுல்லாகான். 


எங்கள் வேலூர் கோட்டத்தின் இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாறு பற்றி நான் எழுதிய நூலை அவர் வெளியிட்டார் என்பது எனக்கு வாழ்வில் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு/

 

 

5 comments:

  1. நல்முத்து தோழர் அமானுல்லாகான்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. விலங்கினும் கீழான ஒருவனின் வக்கிர பின்னூட்டம் நீக்கப்பட்டது

    ReplyDelete
  4. நூல் வெளியீட்டிற்கு நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. நன்றி ஜெயக்குமார் சார்

    ReplyDelete