ஆளும் கட்சியின் மனம் கோணாமல் நீதிபதிகளை எப்படி
நியமிப்பது என்ற கலையை நீதிபதிகள் நியமனக்குழு நீதிபதிகள் கற்றுக் கொண்டு
விட்டார்கள் போலும்.
அவர்கள் முன்பு பரிந்துரைத்த திரு கோபால்
சுப்ரமணியம் அவர்களின் பெயரை மோடி அரசு நிராகரித்து விட்டது. அதற்கான காரணத்தை
அரசு வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட போலி எண்கவுண்டர் வழக்குகளில் தற்போதைய
பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக வாதாடியதுதான் காரணம் என்பது வெளிப்படையாகவே
தெரிகிறது.
எதற்கு வம்பு என்று கோபால் சுப்ரமணியமும் எனக்கு
இந்த பதவியே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். அவருக்கு பதிலாக இப்போது நீதிபதிகள்
நியமனக்குழு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ள பெயர் யு.யு.லலித் என்ற வழக்கறிஞர்.
அவர் அதே போலி எண்கவுண்டர் வழக்குகளில் தற்போதைய
பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ஆதரவாக வாதாடியவர்.
அமித் ஷாவிற்கு எதிராக வாதாடியவருக்குப் பதிலாக
அவருக்கு ஆதரவாகவே வாதாடியவரை பரிந்துரைப்பது என்பதிலேயே அரசியல் விளையாட்டு
நன்றாக தெரிகிறது.
நடக்கட்டும், நடக்கட்டும், நன்றாகவே நடக்கட்டும்.
இந்த வளர்ச்சி விளையாட்டுக்களுக்காகத்தானே மக்கள் வாக்களித்துள்ளார்கள்?
லலித் அவர்கள் நீதிமன்றத்தில் அமீத் ஷாவுக்காக வாதாட வில்லை என்று கூறப்படுகிறது ! கிரிமினல் வழக்குகளையும் அவர் பார்த்தார் என்பது உண்மையே ! அதனால் கிரிமினல் களொடு பெசவேண்டிய துர்பாக்கியம் எனக்கு உண்டு என்று அவர் வருத்தப்பட்டிருக்கிறார் ! மேலும் மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் லலித் அப்பழுக்கற்றவர் என்று குறிபிட்டுள்ளார் ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !---காஸ்யபன்.
ReplyDeleteஐயா குறிப்பிட்டது போல்
ReplyDeleteகாலம் பதில் சொல்லும்