Saturday, July 12, 2014

இளையராஜாவுடன் கல்லூரியில் நான்கு மணி நேரம்

 

இன்று திண்டிவன்ம் கிளை ஆண்டுப்பேரவைக் கூட்டம். காலையில் புறப்படும் அவசரத்தில் புத்தகம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. கைவசம் இருந்த ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், இன்சூரன்ஸ் வொர்க்கர் எல்லாவற்றையும் போகும்போதே படித்து விட்டேன். ஐபாட்டை வேறு சார்ஜ் செய்யவில்லை. (நெட்டிற்கே பாட்டரி சார்ஜ் தாங்காது என்பது என்பதால் தொலைபேசியில் பாட்டு கேட்பதில்லை)

திரும்பும் போது பயணம் மிகவும் மொக்கையாக இருக்கப் போகிறது, தூங்குவதுதான் ஒரே வழி என்று நினைத்துக் கொண்டே திண்டிவனம் அலுவல்கத்தை விட்டு இறங்கும்போதே ஒரு வேலூர் பஸ் ஒன்று உட்கார இருக்கையோடு வந்தது.

பஸ்ஸில் ஏறும் போதே எஸ்.பி.பி "பனி விழும் மலர்வனம்" என பாடிக் கொண்டிருந்தார். 4.40 மணிக்கு திண்டிவனத்தில் புறப்பட்டு எட்டு நாற்பதிற்கு வேலூரில் வந்து இறங்கும் வரை எல்லாம் இளையராஜாவின் பாடல்கள்தான்.

நினைவெல்லாம் நித்யா, பயணங்கள் முடிவதில்லை, நீங்கள் கேட்டவை, அடுத்த வாரிசு, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், மண் வாசனை, தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், தங்க மகன், சலங்கை ஒலி, ஒரு கைதியின் டைரி, மெல்லப் பேசுங்கள், கோழி கூவுது என்று எண்பதுகளின் ஹிட் பாடல்கள். 

எல்லாமே எனது கல்லூரிக் காலத்துப் பாடல்கள். 

மீண்டும் ஒரு முறை கல்லூரிக்குச் சென்று வந்த உணர்வை இளையராஜா பாடல்கள் உருவாக்கியது.

ரசனை மிகுந்த அந்த ஓட்டுனருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

3 comments:

  1. உண்மையிலேயே ரசனை மிகுந்த ஓட்டுநர்தான்

    ReplyDelete
  2. அருமையான பாடல்கள் நிறைந்த படங்கள்! பெரும்பாலும் இளையராசா ரசிகர்களாகவே இருக்கின்றனர் ஓட்டுனர்கள்!

    ReplyDelete
  3. ஒரே நேரத்தில் பலருடனும் இருக்க முடிவதால் அவரை இசைஞானி என்கிறார்களோ ?

    ReplyDelete