யார் இந்த சடங்கை துவக்கி வைத்தார்கள் என்று தெரியாது. மத்திய
பட்ஜெட்டை தயாரிப்பதன் முதல் சடங்காக "அல்வா கிண்டுவது"
என்ற சடங்கை நடத்துகிறார்கள்.
ஒரு பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை இதை விட சிம்பாலிக்காக,
டைரக்டோரியல் டச்சோடு சொல்லி விட முடியாது.
செல்வந்தர்களுக்கு இனிப்பான அல்வாவாகவும் சாதாரண மக்களுக்கு
"அல்வா தருவது" என்றுமே நம் நாட்டின் பட்ஜெட்டுக்கள் இதுநாள்
வரை அமைந்துள்ளது.
காங்கிரஸ் அரசு எடுத்த முடிவைத்தான் நாங்கள் அமலாக்கினோம்
என்று ரயில் கட்டண உயர்வை நியாயப்படுத்திய அருண் ஜெய்ட்லி
தயாரிக்கிற பட்ஜெட்டும் சிதம்பரம் பட்ஜெட்டிற்கு மாறாகவா
இருக்கப் போகிறது.
சிதம்பரம் மக்களுக்குக் கொடுத்த அதே அல்வாவைத்தான் இப்போது
ஜெய்ட்லீயும் தரப் போகிறார்.
ரசித்துச் சுவைக்க தயாராக இருங்கள்.
No comments:
Post a Comment