கும்பகோணம் நெருப்பில் எரிந்த நீதி
அந்த கொடூரம் நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்புதான் நீதி தேவதையின் கண்கள் பாதி மட்டும் திறந்துள்ளது. பாதி திறந்த கண்கள் பார்வைக் கோளாறுக்கும் உட்பட்டு விட்டது.
எரிந்து விழுந்து தொன்னூற்று நான்கு இளந்தளிர்களின் வாழ்வை கரிக்கட்டையாய் சிதைத்த அந்த பாவிகளுக்கு வெறும் பத்தாண்டுகள் மட்டும் சிறைத்தண்டனையாம். இரண்டு கைகளால் லஞ்சப் பணத்தை வாங்கி வாங்கி போட்டு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அதிகார வர்க்க மிருகங்களுக்கு விடுதலையாம்!
நீதி தேவதையின் கண்களை கறுப்புத் துணி போட்டு கட்டியிருந்தால் அதன் மூளையை கரன்சி நோட்டுக்களால் கட்டியிருப்பார்களோ?
இது வழங்கப் பட்ட தீர்ப்பா இல்லை வாங்கப் பட்ட தீர்ப்பா என்ற கேள்வியை சிறு குழந்தைகள் கூட கேட்கும்.
நீதி இங்கே தாமதிக்கப்பட்டது.
இப்போது மறுக்கப்பட்டது.
ஊழல் பேர்வழியான மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் திருமதி கல்யாணி மதிவாணனுக்கு ஆதரவாக அப்பீல் செய்த ஜெ இந்த அநியாயமான தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வாரா?
மனம் கனக்கிறது தோழரே
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteமறுக்கப் பட்ட நீதி மேல் முறையீட்டின்போது மறு வாழுவு பெற வேண்டும்.
பயனுள்ள வலைதளம் வாழ்த்துக்கள்.
புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)
well done comrade!
ReplyDelete