வேலூர் நகரத்தில் ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதில் உள்ள பல கட்டுப்பாடுகள் குறித்து முன்னரே எழுதியிருக்கிறேன்.
நெடுஞ்சாலைத்துறை, காவல் நிலையம் ஆகியவற்றில் அனுமதி வாங்கி மாநகராட்சியில் பணம் கட்டி அந்த ரசீதை ஸ்கேன் செய்து அந்த பேனரிலியே அச்சிட வேண்டும்.
இதை செய்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கிடும். அப்படி அனுமதி பெறாத போர்டுகள் அகற்றப்படும். கடந்த ஆண்டு கலைஞர் பிறந்தநாளின் போது திமுக வைத்த போர்டுகள் அகற்றப்பட்டது. ஜெ பிறந்தநாளின் போது காக்கிகள் கண்ணை மூடிக்கொண்டிருந்தது வேறு விஷயம்.
இந்தக் கட்டுப்பாடுகள் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதை ஒற்றைச்சாளர முறைப்படி எளிமைப் படுத்த வேண்டும் என்பதுதான்.
இப்போது என்ன விஷயம் என்றால், காவல்துறை வடக்கு மண்டல விளையாட்டுப் போட்டிகள் வேலூரில் நடைபெறுகிறது. அதற்காக வேலூர் நகரில் பல இடங்களில் காவல்துறை ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைத்துள்ளது. அதில் ஒரு போர்டில் கூட மாநகராட்சியில் பணம் கட்டிய ரசீதின் நகல் இல்லை, நெடுஞ்சாலைத்துறை அனுமதி இல்லை.
அப்படியென்றால் காவல்துறை போட்டுள்ள கட்டுப்பாடுகள் அதற்குப் பொருந்தாதா?
No comments:
Post a Comment