மார்கண்டேய கட்ஜு அவர்கள்
எழுப்பியுள்ள எந்த ஒரு பிரச்சினைக்கு உள்ளேயும் நான் நுழையவில்லை. நீதிபதிகள்
நியமனம் சர்ச்சைக்கு உள்ளாவது இப்போது வாடிக்கையாகி விட்டது. திரு கோபால்
சுப்ரமணியம் பிரச்சினையின் போது சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு
ஏ.பி.ஷா மிகக் கடுமையான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
நீதிபதிகள்
அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அனைவருடைய எதிர்பார்ப்பும்
அதுதான். அதற்கு நீதிபதிகள் நியமனம் என்பது வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும்.
நீதிபதிகள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் “கொலோஜியம்” முறை வினோதமான
ஒன்று.
இந்த முறையை தக்க வைப்பதற்காக
நெளிவு சுளிவுகளுக்கான வாய்ப்பு உள்ளது என்பது இப்போது திரு கட்ஜூ அவர்களின் காலம்
கடந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக
முதலில் ஒரு தேசிய அளவிலான விவாதம் தேவை. அதை மோடி அரசு செய்யுமா? நீதித்துறை
பலவீனமாக இருப்பதுதான் அவர்களுக்கு பலம் என்பதால் வாய்ப்பு குறைவு என்று நான்
கருதுகிறேன்.
No comments:
Post a Comment