Monday, July 21, 2014

இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமா?


http://123tamilforum.com/imgcache/10/65425.jpg



ஆசிரியர் தோழர் எட்வின் அவர்கள் முகநூலில் எழுதியதைப் படித்ததிலிருந்தே  “கண்மணி நீ வரக் காத்திருந்தேன்”  பாடலை கேட்க வேண்டும் என்று நினைத்து இப்போதுதான் முடிந்தது.

அவர் எழுதியதை முதலில் படியுங்கள். நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன் ஆகியோருக்கு நல்ல பாடலை அளித்த இளையராஜா பற்றியும் அவர் ஒரு வார்த்தை எழுதியிருக்கலாம்.

"கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" பாடலை இன்று பேருந்தில் வரும்போது கேட்டேன். எண்பதுகளின் மத்தியில் எங்களைக் கட்டி இழுத்த பாடல்.

அதில் ஒரு இடத்தில்,

"ஆசை தீரப் பேச வேண்டும்
வரவா வரவா"

என்று உயிர் கசிய பாடியிருப்பார் ஜேசுதாஸ். அதற்கு பதில் சொல்வதாக

"நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா"

என்று உமா ரமணன் பாடுவார். அதில் மெதுவா மெதுவா என்பதை அப்படி அழகாகப் பாடுவார். இசையின் எந்த நுணுக்கமும் தெரியாத நாங்களே சொக்கி விழுவோம்.

இன்றும் அப்படித்தான்.

ஒரே சந்தேகம்தான் ஏன் உமா அம்மா அதிகம் பாடுவதில்லை. எவ்வளவு இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு."


எனது கல்லூரி வாழ்வின் கடைசி நாளில் பார்த்த திரைப்படம் “தென்றலே என்னைத் தொடு” என்பதால் அப்படமும் சரி, தென்றலாய் வருடும் அப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்னும் மனதில் நிலைத்திருக்கிறது. 

உங்களுக்கும் இப்பாடல் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். அப்படி பிடிக்குமானால் நீங்கள் உடனே பார்க்க இணைப்பு இதோ.

3 comments:

  1. கண்மணி நீ வரக் காத்திருந்தேன் போலவே புதிய பூவிது, கவிதை பாடு குயிலே குயிலே, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற பாடல்களும் கேட்க ரம்மியமானவை. இளையராஜாவின் இசையில் இந்தப் படப் பாடல்கள் ஒரு வித்தியாசம்தான். உமா ரமணன் போன்றே சசி ரேகா என்றொரு நல்ல பாடகி இருந்தார். அவரையும் நம் இசை அமைப்பாளர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற வருத்தம் உண்டு.

    ReplyDelete
  2. There used to be a rumour that Uma was not called by many only because Ramanan also insisted to sing with her!

    ReplyDelete