மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவ்வப்போது ஏதாவது சம்பவங்கள் உண்ர்த்திக் கொண்டே இருக்கும்.
சங்க வேலையாக அலுவலகம் சென்று மாலை ஏழு மணி போல வீடு திரும்பிய போது ஒரு பைக் என்னை வேகமாக கடந்து சென்றது. கைக்குழந்தையோடு மனைவியை பின்னால் உட்கார வைத்து ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே அந்தப் பெண் குழந்தையோடு தவறி சாலையில் விழுந்தார்.
நல்ல வேளையாக மெதுவாக வந்து கொண்டிருந்த என் வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் பின்னே வரவில்லை. நானும் வண்டியை நிறுத்தி ஓட, ஒரு முப்பது நொடிகளுக்குள் பத்து பதினைந்து பேர் கூடி விட்டோம். தண்ணீர் தெளித்து ஒருவர் அந்தப் பெண்ணை எழுப்ப முயற்சிக்க, பயத்தில் அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணை ஆட்டோவில் போய்க் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அப்படியே தாங்கி அரவணைத்தார்.
இன்னொரு ஆட்டோவை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினோம். அவர் வந்த பைக்கையும் ஓரமாக நிறுத்தினார் ஒருவர். இன்னொரு பெண் அந்தப் பெண்ணோடு ஆட்டோவில் மருத்துவமனை சென்றார்.
ஒரு இரண்டு நிமிடங்களுக்குள் அவர்களுக்கு உதவி செய்ய ஏராளமானவர்கள் கூடியது மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.
அன்னியன் பட்க் காட்சி ஒன்று அங்கே தோற்றுப் போய்க் கொண்டிருந்தது.
பொது மக்களிடம் மனிதம் உயிரோடு இருக்கிறது நண்பரே
ReplyDeleteசாதாரண மனிதர்களிடம் மனிதம் வாழ்கிறது
ReplyDelete