Sunday, July 20, 2014

இனிமையான பாடல்களோடு தேசிய விருது காமெடியையும் ரசியுங்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டம் இரவு 12.30 மணிக்குத்தான் தொடங்கியதல்லவா! அதுவரை தூக்கம் வராமல் இருப்பதற்காக நான் பார்த்துக் கொண்டிருந்த சில பாடல்களை இங்கே பகிர்கிறேன். 

இனிமையான பாடல்களோடு கடைசியில் ஒரு காமெடி பாடலும் உள்ளது. அதையும் தவறாமல் பாருங்கள்

 http://s2.dmcdn.net/AiQzO.jpg

சிவாஜி கணேசனின் கம்பீரம், பத்மினியின் நளினமான நடனம் இவற்றை மகாபலிபுரம் சிற்பங்களின் பின்னணியில்  அழகு தெய்வம் மெல்ல நடந்து வரும் போது  கண்டு ரசியுங்கள்  

இந்த கம்பீரம் நிஜமான அரசர்களிடம் கூட இல்லாதது. சிவாஜியால் மட்டுமே சாத்தியம். பத்மினியின் துள்ளல் நடனத்தை இந்த மன்னவனோடு    நீங்களும் ரசிப்பீர்கள்.

மீண்டும் ஒரு சிவாஜி பத்மினி பாடல், கோவலனும் மாதவிப் பொன் மயிலாள் இப்படித்தான்  சீண்டிக்கொண்டே இருந்திருப்பானோ? அதனால்தான் அவளும் அவனை வெறுப்பேற்றி வெளியேற்றிருப்பாளோ? 

அருகில் இருந்தும் பேச முடியாத தவிப்பை என்று நலம்தானா?பாடல் வரிகளால் பத்மினி வெளிப்படுத்த விழிகளால் சிவாஜி ஆறுதல் சொல்வதை   பார்த்து ரசியுங்களேன்.

மதுரை பொன்னுசாமி, சேதுராமன் இசைக்கு  இங்கே  சிவாஜி கணேசன் தன் அற்புதமான ஆற்றலால்  உயிர் கொடுத்திருப்பார்.

மாளிகைக்குள் நுழைய முடியாத ரசிகர்களுக்காக அவர் வாசிக்க       வெளிநாட்டவரும் தேடி வந்து ரசிப்பதை நீங்களும் ரசிப்பீர்கள்.

தேனோடு கலந்த இனிய இசையை நிஜ வாழ்விலும் இணைந்த தம்பதியர்   வழங்க நாமும் கொஞ்சம் மெய்மறந்து போவோம்.

எல்லாமே  இனிய பாடல்களாக இருந்தால் திகட்டி விடுமல்லவா? ஆகவே இந்த காமெடிப் பாடலையும் பாருங்கள். இந்த நடிப்பிற்குத்தான் தேசிய விருது தரப்பட்டது என்பது பாடலை விட மிகப் பெரிய காமெடி. 

No comments:

Post a Comment