காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாவிற்கும் உள்ள வித்தியாசம் கட்டுவிரியனுக்கும் கண்ணாடி விரியனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்று நாங்கள் சொன்னதை கேட்காமல் மோடிக்கு வாக்களித்த இந்தியாவின் இளிச்சவாய வாக்காளார்களே, உங்களுக்கு ஒரு கேள்வி.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்து அதையே மேடைதோறும் முழங்கினார் திருவாளர் மோடி.
காங்கிரஸ் அரசு எடுத்த முடிவை நாங்கள் பின்பற்றப் போகிறோம் என்று நேற்று மோடி அரசு சொல்லி விட்டது. எந்தெந்த மாநிலங்கள் சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற பகாசுர நிறுவனங்களை அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளனரோ, அங்கே அவை கடை துவக்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
மாநிலங்கள் அனுமதி கொடுக்கலாம் என்பதையே மாற்றுவோம் என்றுதான் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்கள். இரண்டு மாதத்திற்குள் தாங்கள் எடுத்த நிலையை மாற்றி ஒரு மிகப் பெரிய துரோகத்தை இழைத்துள்ளார்கள்.
மோடியின் ஆதரவாளர்களே, இந்த அந்தர் பல்டியின் மர்மம் என்ன?
பதில் சொல்லுங்கள், என்ன பேரம் நடந்தது? விளக்குங்கள்
கவர்ச்சி விளம்பரத்தில் நாங்கள் ஏமாந்து விட்டோம் என்பது தான் உண்மை.
ReplyDeleteஆனால், இன்னும் பல பேர் தாங்கள் ஏமாற்றுபட்டு கொண்டிருப்பது தெரியாமலேயே மோடியின்
புகழ் பாடிகொண்டிருப்பது தான் வேதனை.
சரி காங்கிரசும், பாஜகவும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாகி விட்டது. இதற்கு மாற்று என்னதான் வழி
உங்கல் நேர்மையைப் பாராட்டுகிறேன் திரு ஜீவன் சிவம். மக்களுக்காக உண்மையாக உழைக்கும் இடதுசாரிகளைத் தவிர வேறு மாற்று இருக்க முடியுமா?
ReplyDeleteTell me, this is comedy. Right?
Deleteமுகம் காட்ட வக்கில்லாதவர்கள் அரசியல் பேச வரக்கூடாது. தம்பி கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடு
Deletesir,
ReplyDeleteoru pechuku yethavadhu Kaamrad PM aanaal,
10 aandu seer/per(alivay) 50 days or 100 days-il appadiye
reverse-kku kondu varamudiyumaa??
Practicalla yosinga saar!!!
ex. Naaliye West Bengal-la Communist vandaalum
sari seiya 5-10 years aagum illayaa??
நிலைமையை யாரும் மாத்த சொல்லலை. அது உங்களால முடியாதுனு எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். தேர்தல் வாக்குறுதி கொடுத்துட்டு எதுக்குய்யா பல்டி அடிக்கிறீங்க, அதுக்கு முதலில் பதில் சொல்லுங்க
Deleteoru post-la Foot Ball-ku unga veetu kadava
ReplyDelete15 minuites-la odai-chitinga, aaanaaal...
yevallavu neram and atharkaana expert(aachaari) time, money
thevaipattathu athai refit panna.
Nichayamai 15 minuites-kul illa!! sariya?
oru kadavukkey ithanai problem-na? Modi yoda katchi-la pala
palam peru(m thalai) chalikal, total system, idhukku yellam yevvalavu
effort, time, honesty, adjustment(yeduthen kavilthen udhavadhu)...
Aana parunga yennai BJP supporter-nu sollakoodathu..
yen na Sardar kitta kooda idhey madhiri yedhir paarthu yemandhavan..
I am paavam,,