இந்த காமெடியெல்லாம் காங்கிரசில் மட்டுமே சாத்தியம்.
தங்கபாலுவின் மனைவி மயிலாப்பூர் வேட்பாளர். ஆனால் அவர் வேட்பு மனுவில் குளறுபடி செய்ய மாற்று வேட்பாளராக மனு செய்திருந்த தங்கபாலுவேஇப்போது வேட்பாளர். தனது மனைவியின் வேட்புமனுவைக் கூட இவரால் சரி பார்க்க முடியவில்லையா? அல்லது தானே வேட்பாளராக மாறுவதற்கு செய்த குறுக்கு வழியா என்பது அவருக்கே வெளிச்சம்.
கிருஷ்ணகிரி காமெடிதான் உச்சகட்டம். ஹசீனா என்றொரு பெயரை
முதலில் சொல்கின்றார்கள். அதற்கு எதிர்ப்பு வந்ததும் மக்பூல் ஜான்
என்று வேறொருவரை அறிவிக்கிறார்கள். மாற்றப்பட்டாலும் ஹசீனா
வேட்புமனு தாக்கல் செய்கின்றார். அதிகாரபூர்வ வேட்பாளராக
அறிவிக்கப்பட்ட மக்பூல்ஜான் வேட்புமனுவை தாக்கல் செய்யவே இல்லை. ஆகவே ஹசீனாதான் காங்கிரஸ் வேட்பாளர் என்று
சொல்லுகின்றார்கள்,
ஆனால் ஹசீனா கடைசி நிமிடத்தில் வேட்புமனுவை வாபஸ் வாங்க
மாற்று வேட்பாளராக மனு செய்த ஹசீனாவின் கணவர் இப்போது
காங்கிரஸ் வேட்பாளராம்.
இப்படியெல்லாம் காமெடி செய்யத்தான் கருணாநிதியை மிரட்டி
63 தொகுதிகள் வாங்கினார்கள் போலும்.
No comments:
Post a Comment