Monday, March 7, 2011

சீக்கிரமா பல்டியடிங்கப்பா! மோடி மஸ்தான் நாடகம் போரடிக்கிறது.

பேச்சுவார்த்தையில்  சுமுக உடன்பாடு ஏற்பாடு  காங்கிரஸ் கட்சிக்கு 
ஒரு நாள் அவகாசம் அளித்துள்ளதாக  மு.க.ஸ்டாலின் இப்போது 
அறிவித்துள்ளதுதான்  தற்போதைய பரபரப்புச்செய்தி.  காங்கிரஸ் 
கட்சியும் திமுகவும்  நடத்திக் கொண்டிருந்த பாம்பு கீரி விளையாட்டின் 
ஒரு பகுதிதான் அமைச்சரவையிலிருந்து  வெளியேற்றம், பிரச்சினை 
அடிப்படையில் ஆதரவு, கூட்டணி முறிவு  ஆகிய நாடகங்கள்  என்பதை 
இன்றைய செய்தி அம்பலப்படுத்தி விட்டது. 

சனிக்கிழமை முடிவு எடுத்த பின்பு, ராஜினாமா கடிதம் அளிக்க திங்கள்
வரை காத்திருக்க வேண்டும்?  காங்கிரஸ் எங்களை அணுகவில்லை, திங்கள் காலை பத்து மணிக்கெல்லாம்  ராஜினாமா கடிதம் அளிக்கப்படும் 
என்று நேற்று சொன்னார்கள். மாலை கொடுக்கப்படும்  என்பது இன்று 
காலைய செய்தி.  பிரணாப் முகர்ஜி தலைவரோடு இரு முறை பேசினார்,
அதனால் ஒரு நாள் அவகாசம் என்று  பாம்பையும் கிரியையும் சண்டை 
போட விடாமலே காலம் தாழ்த்தும் மோடி மஸ்தான் வேலை தான் 
இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  
மூன்று சீட்டுக்கள் அல்ல பிரச்சினை என்பது எல்லோருக்கும் தெரியும். 
திரை மறைவில் என்னென்ன பிரச்சினைகள், பேரங்கள், யார் சமரசம்
செய்து கொண்டனர், யார் சரணாகதி அடைந்தனர்  என்பதெல்லாம் நிச்சயம்   ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றது. என்ன 
அப்போது  இவர்கள் எல்லாம்  சிரித்த முகத்தோடுதான் தொலைக்காட்சிக்கு  போஸ் கொடுப்பார்கள்.  

ஊக்க வார்த்தை கூறி மகிழ்ச்சியை தெரிவித்த  வீரமணி, திருமா, சீமான் 
போன்றவர்கள்தான்  வெட்கத்தில் நெளிவார்கள்.  மோடி மஸ்தான் நாடகம்   நீண்ட நேரம் நீடித்தால் மக்கள் இடத்தை காலி செய்திடுவார்கள். 
ஆகவே அடுத்த காட்சியான பல்டி நாடகத்தை உடனே தொடங்குங்கள்.


 

2 comments:

  1. முதல்ல மோடி மஸ்தான் விளையாட்டு, அடுத்து ஆட்றா ராமா ஆட்றா ராமா வா
    நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  2. பேரம் நடந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete