Wednesday, March 9, 2011

தூ .. நீயெல்லாம் ஒரு ?

இப்படி ஒரு கேவலமான மனிதரை இது வரை இந்தியா பிரதமராக  
அடைந்தது கிடையாது.  கண்காணிப்பு  ஆணையராக தாமஸ் நியமனம் 
செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில்  அவர் விளக்கம் 
அளிக்கையில்  தாமஸ் மீது வழக்கு உள்ளது  தனக்கு தெரியாது, குறிப்பு 
தயாரித்த அமைச்சரின் தவறு  என்று சொல்லி  தன்னை ஒரு யோக்கியன் 
போல காண்பிக்க முயன்றார்.  சுஷ்மா ஸ்வராஜ்  சொல்லும் போதுதான்
தனக்கு தெரியும்  என்கிற போது   அதை சரி பார்த்து விட்டு முடிவெடுத்திருக்க  வேண்டியதுதானே? அதையும் அமைச்சர் சவுகானதான்  தடுத்தாரா?  தாமசின்  அப்பழுக்கற்ற நேர்மை குறித்து 
யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று விளக்கம் அளித்தீர்களே! 
உச்ச நீதிமன்றத்தில்  பிரமாண  வாக்குமூலம் அளித்தீர்களே? அப்போது
கூட  சரி பார்க்க வேண்டும் என்று  சிந்திக்கவில்லையா?  
சோனியா காந்தியின் கட்டளை, அவரைச்சுற்றி  உள்ளவர்களின் கட்டளை
அதனை அமுலாக்கினேன்  என்று  சொல்ல வக்கில்லாமல்  மாற்றி 
மாற்றி பேசுவது,  அடுத்தவர் மீது  பழி போடுவது   ஒரு கேவலமான வேலை.  வெட்கம் கெட்ட செயல்.  இவ்வளவு  தூரம் கீழிறங்கிப் 
போயுள்ள மன்மொகன்சிங்கைப் பார்த்து ' பாதகம் செய்பவரைப் பார்த்தால்  அவர் முகத்தில் காறி  உமிழ்ந்திடு என்று    பாரதி  சொன்னது போல  கேட்கிறேன்.
தூ..  நீயெல்லாம் ஒரு பிரதம மந்திரி !

 
 

1 comment:

  1. இப்படி கொஞ்சம் கூட ரெச்பான்சிபிளிடியே இல்லாத பதில் சொல்வதற்கு ஒரு பிரதம மந்திரி தேவையா? இதற்க்கு மன்மோகன் வெட்கப்பட வேண்டும்!

    ReplyDelete