Tuesday, March 1, 2011

தன்மானச்சிங்கம் கலைஞரின் குரலாக இனமானச்சிங்கம் வீரமணி


பாவம் ஸ்பெக்ட்ரம் பூதம்  கலைஞரை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது. ஆட்சியில் பங்கு, ஆதாயத்தில்  பங்கு, அதிக இடங்கள், அமைச்சர் பதவிகள், குறைந்த பட்ச பொதுத்திட்டம் (இரண்டு பேரும்  சேர்ந்து சாப்பிடுவோம்) அனைத்தும்  வேண்டும், அத்தனையையும் ஒப்புக்கொண்டு  உடனே அறிவிக்கவும்  வேண்டும் என்று காங்கிரஸ் நிபந்தனைகள்  விதிக்கிறது. இதற்கெல்லாம் வழியில்லை, கூட்டணி வேண்டாம் உன் வழியைப் பார்த்துநடையைக் கட்டு என்று துரத்தவும் முடியவில்லை. முதுகின் மீது ஏறி அமர்ந்துள்ளவர்களிடம் ' இதயத்தில் இடம் உண்டு  ' என்ற வசனத்தையும்   பேச இயலவில்லை. நானே கேள்வி, நானே பதில் என்ற அவரது பிரபல யுத்தியையும்  பயன்படுத்த முடியாத
பரிதாப நிலையில் குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல 
தாய்க்கழக வீரமணியை  பேச வைத்துள்ளார்.

பாருங்கள் இதற்கு ஆற்காட்டார், துரைமுருகனைக் கூட பயன்படுத்த
முடியவில்லை. இதைத்தான் கையறு நிலை என்பார்களோ? 

தாயாக அண்ணன் வீரமணியும் கூறி விட்டார். தோளில் சவாரி செய்பவர்கள்  குட்ட குட்ட குனிய வேண்டாம், ஆட்சியில் பங்கு என்றால்
தோல்வி நிச்சயம். ஆகவே கவலைப்படாதே சகோதரா, தாய்க்கழகம் 
பார்த்துக் கொள்ளும் என்றும் சர்ப் விளம்பரம் போல கறை நல்லது என்றும்  சொல்லிவிட்டார்.  கலைஞர்  என்ன செய்யப்போகின்றார் 
என்பதை விட இ.வி.கே.எஸ் இளங்கோவனின் அறிக்கை எப்படி வரும் 
என்று அறிந்து கொள்ளவே ஆர்வமாக உள்ளேன்.

 

3 comments:

  1. fontமாத்துங“க சார்... எதுவுமே தெரியல..

    ReplyDelete
  2. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_01.html

    ReplyDelete
  3. நிறைய பேருக்கு கமென்ட் போடுங்க... பாலோவர் ஆகுங்க... உங்கள் பதிவு பலரையும் சென்றடையும்..

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_01.html

    ReplyDelete