நேற்று காலை ஒன்பது முப்பது மணிக்கு எங்கள் அலுவலகத்திற்கு ஒரு
காவல்துறை துணை ஆய்வாளர் வந்தார். அலுவலக வாசலில் இருந்த
எங்கள் சங்கத்தின் கொடிக்கம்பத்தையே முறைத்துப் பார்த்துக்
கொண்டிருந்ததைப் பார்த்து அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்த
எங்கள் சங்கத்தலைவர் தோழர் தசரதன் அவரை அணுகி என்ன விஷயம்
என்று கேட்டிருக்கிறார். தேர்தல் கமிஷன் எல்லா கட்சிகளின்
கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளையும் அகற்றி கம்பத்திற்கும்
வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே
இந்த கொடியை உடனே கீழிறிக்க வேண்டும் என்று அதிகார தொனியில்
சொல்ல தோழர் தசரதன் அவருக்கு தக்க பதிலளித்துள்ளார்.
இது கட்சிக் கொடி அல்ல. எங்கள் சங்கக்கொடி என்று. சிவப்புக் கலரில்
கொடி உள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிதான் என்று அவர்
மீண்டும் சொல்ல, தோழர் தசரதன் அவருக்கு சிறு பிள்ளைக்கு சொல்வது போல கொடியைப் பாருங்கள் அதிலே எங்கள் சங்கத்தின் சின்னமான
ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளது. எங்கள்
சங்கத்தின் பெயர் ALL INDIA INSURANCE EMPLOYEES ASSOCIATION
என்று சொன்ன பிறகும் சிவப்பு கலருணா கம்யூனிஸ்ட் கட்சிதான்
என்று மீண்டும் சொல்ல, தசரதன் கடுப்பாகி தொழிற்சங்கக் கொடிகளையும் அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவு
இருந்தால் அதைக் காண்பியுங்கள், இல்லையென்றால் கொடியை
எல்லாம் இறக்க முடியாது என்று சொல்ல, இன்னும் அரை மணி
நேரத்தில் ஆர்டரோடு வருகின்றேன் என்று போனவர் இன்னமும்
வரவில்லை.
சுத்துகிற மாட்டுக்கு செக்கு என்று தெரியுமா? சிவலிங்கம் என்று
தெரியுமா? என்று ஒரு பழமொழி உண்டு. பொதுவாகவே அது
காவல்துறைக்கு பொருந்தும் என்றாலும் அரசியல் கட்சிக்கொடிக்கும்
தொழிற்சங்கக் கோடிக்கும் கூட வித்தியாசம் தெரியாத அதி அதி அதி
புத்திசாலிகளாக காவல்துறை உள்ளது வெட்கக்கேடு.
பின்குறிப்பு : சிவப்பு நிறத்தை பார்த்து மாடுகள் மிரளலாம். காவல்துறை
என் மிரள்கிறது. இதனால் நான் காவல்துறையை மாடுகள் என்று
சொல்வதாக யாராவது அர்த்தம் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சிவப்பு என்றாலே ஒரு அலர்ஜி.
ReplyDelete