என்ற பிரெஞ்சுப் புரட்சியில் உயிர் நீத்த பிரபல பிரபல புரட்சியாளன்
வைலியாவின் அமர வாக்கியத்தை எங்கள் செயலுக்கு சாட்சியமாக்குகிறோம்.
ஆட்சி சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த தேசத்தை அவமதிக்கும் செயலை ஆங்கில ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களின் கொள்கை நமக்கு
தெளிவாக தெரிந்ததே. சைமன் கமிஷனிடமிருந்து ஆட்சி சீர்திருத்தம் என்ற ரொட்டித் துண்டுகளுக்காக எதிர் நோக்கும் ஆட்களை பொதுப் பாதுகாப்புச்சட்டம் போன்ற மசோதாக்களால் அடக்கி ஒடுக்க அரசு
முயல்கிறது. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் பத்திரிக்கைகளின்
வாயிலாக ராஜதுரோகம் பரவுவதைத் தடுக்கவும் ஒரு சட்டம் திணிக்கப்படும் என்றும் அரசு அச்சுறுத்துகிறது. பொதுவாழ்வில்
பணியாற்றும் தொழிலாளர் தலைவர்கள் எந்தக்காரணமும் இன்றி
கைது செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசின் போக்கை தெளிவாகவே
காட்டுகின்றன.
இந்திய விடுதலைக்காக மிக இளம் வயதிலேயே இன்னுயிர் நீத்த பகத்சிங்கை இந்தியாவிற்கு
அடக்குமுறை மற்றும் அவமதிப்பின் இந்த சூழலில் தங்களுடைய
பொறுப்பைத் தெரிந்து கொண்டுதான் H.S.R.A. தங்களுடைய
போராளிகளுக்கு இத்தகைய பணிகளைச்செய்ய பணித்திருக்கிறது.
சட்டமியற்றும் இத்தகைய நாடகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதே நோக்கமாகும். அந்நியர்கள் நம்மைச் சுரண்டுகிறார்கள்.
அதற்கு சட்டத்தை போர்த்தி விடும் செயலை அனுமதிக்கக்கூடாது.
பாராளுமன்றம் என்ற நாடகத்திலிருந்து விலகி தங்களுடைய சொந்தத்
தொகுதிகளுக்குத் திரும்பிச்சென்று அன்னியச்சுரண்டலுக்கு எதிரான
புரட்சிக்கு மக்களை ஆயப்படுத்துமாறு மக்கள் பிரதிநிதிகளை
கேட்டுக்கொள்கிறோம்.
மனித வாழ்க்கையை நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம். ஒவ்வொரு நபரும் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு எதிர்காலத்தை காண
விரும்புகின்றோம். மனிதக் குருதி சிந்த நேரிடுவதால் நாங்களும்
வருந்துகிறோம். சுரண்டலை ஒழித்துக்கட்டும் புரட்சியில் தவிர்க்க
இயலாமல் குருதி சிந்த நேரிடுகிறது.
இன்குலாப் ஜிந்தாபாத்
இந்த நாளில் தூக்கு மேடையை முத்தமிட்ட
புரட்சி வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு
ஆகியோருக்கு வீர வணக்கம்.
நாடாளுமன்றத்தில் வெடிகுண்டோடு அவர்கள்
நாடாளுமன்றத்தில் வெடிகுண்டோடு அவர்கள்
வீசிய பிரசுரம்தான் மேலே தரப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைக்காக மிக இளம் வயதிலேயே இன்னுயிர் நீத்த பகத்சிங்கை இந்தியாவிற்கு
அளித்த பஞ்சாப் மண்தான்
இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக
மாற்றத் துடிக்கும் மன்மோகன் சிங்கையும்
அளித்தது என்பது எவ்வளவு பெரிய முரண்நகை
நீங்கள் எழுதும் கட்டுரைகள் சிறப்பாகவும் , மாற்று அரசியல் சிந்தனையை மேம்படுத்துவதாகவும் உள்ளது.
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Thank you Comrade Hariharan
ReplyDelete