Tuesday, March 29, 2011

தாவி வா! தாவி வா ! தேர்தலில் சீட்டு பெற தாவி வா !

இந்த சட்டமன்ற  தேர்தல்  ஒரு விதத்தில்  சிறப்பானது. ஒரு கட்சியிலிருந்து  அடுத்த கட்சி மாறி வந்தவர்களுக்கு  தேர்தலில் நிற்க 
அதிகமான  வாய்ப்பு  கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் இதுதான். 

திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை நம்பி தாவியவர்களை கைவிடாத  கட்சி  என்ற பெயரை பெற்றுள்ளது. 

சேகர்பாபு,
கம்பம் ராமகிருஷ்ணன்,
அனிதா ராதாகிருஷ்ணன்,
மு.கண்ணப்பன்,
திருப்பூர் கோவிந்தசாமி 

ஆகிய சமீபத்திய கட்சி மாறிகளுக்கும்  

எ.வ. வேலு,
மைதீன்கான்,
திருச்சி செல்வராஜ்,
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 

ஆகிய பழைய கட்சிமாறிகளுக்கும்  தி.மு.க  இந்தமுறையும் 
வாய்ப்பு அளித்துள்ளது.  

செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகிய இரு பெரிசுகள் மட்டும்தான்
கைவிடப்பட்டவர்கள். 
திமுகவில் ஐக்கியமாவார் என்று  எதிர்பார்க்கப்பட்டு கடைசி நேரத்தில் 
காங்கிரசில் தாவிய எஸ்.வீ. சேகர் பாவம். ஏற்கனவே கோஷ்டிப் 
பூசலில் குடுமி பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் அவரை கைவிட்டு 
விட்டது. முன்போல அவரால் மயிலாப்பூரில் சுயேட்சையாகவும் 
நிற்கவும் முடியவில்லை. நாவலர்  நெடுஞ்செழியனை விட கூடுதல்
வோட்டுக்கள் பெற்றவன் என்று பீற்றிக் கொள்ளவும் வாய்ப்பில்லாமல் 
போய்விட்டது. 

அதிமுக கூட்டணியில்  கட்சி தாவியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த 
பெருமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு. 

கடந்த தேர்தலில் தளி தொகுதி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ஒதுக்கப்
பட்டது.  அந்த வேட்பாளருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன்  சுயேட்சை வேட்பாளராக நின்றார்.   மார்க்சிஸ்ட்  கட்சி 
அவர் மீது நடவடிக்கை  எடுத்து  கட்சியிலிருந்து நீக்கியது. சுயேட்சை 
வேட்பாளராக வெற்றி பெற்ற  ராமச்சந்திரனை சி.பி.ஐ  தனது 
கட்சியில் இணைத்துக் கொண்டது. அவர் இப்போது  சி.பி.ஐ. வேட்பாளர். 
சி.பி.ஐ  வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் நின்றதால்  சி.பி.எம் மால் 
நீக்கப்பட்டவர் சி.பி.ஐ வேட்பாளராகவே போட்டியிடுவது கொடுமையா,
வேடிக்கையா? 

அதே போல குடியாத்தம் தொகுதி வேட்பாளர் லிங்கமுத்து கூட 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைக்காக 
மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 
தாவியவர்தான்.

கட்சி மாறிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது இந்த தேர்தல். 


 

2 comments:

  1. ஈரோடு முத்துசாமி, கடலாடி சத்தியமூர்த்தி ஆகியோரை விட்டு விட்டீர்கள்!

    இந்த பதிவின் குறி திமுக போல தெரியவில்லையே. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து மாறியவர்களுக்கு சி.பி.ஐ சீட் கொடுத்துள்ளதால் வந்த கோபம் போல் தெரிகின்றதே!

    ReplyDelete
  2. சி.பி.ஐ கட்சியை உடைத்து யு.சி.பி.ஐ கட்சியில் இணைந்து மீண்டும் சி.பி.ஐ கட்சிக்கே தாவி வந்த ஓடுகாலி தா.பாண்டியனை மாநிலச்செயலாளராக
    தேர்ந்தெடுத்த அக்கட்சியில் கட்சி மாறிகளுக்கே முன்னுரிமை.

    ReplyDelete