Friday, March 4, 2011

தமிழன்டா

நியுயார்க்கில் ஒரு  நேர்முகத்தேர்வு. மைக்ரோசாப்ட் கம்பெனி 
தலைமையகத்தில் பில் கேட்ஸ்  நேரடியாக நடத்துகின்ற 
வாக் இன் நேர்காணல்.

ஐயாயிரம் பேர் குழுமியிருந்தார்கள். மிகப் பெரிய அரங்கில்  கையில் 
மைக்கோடு பில் கேட்ஸ் நின்று கொண்டிருந்தார்.  எங்களது ஐரோப்பிய
கிளைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் இது.
ஜாவா மென்பொருள் பற்றி தெரியாதவர்கள்  அவசியமில்லை எனச்சொன்னதும்  இரண்டாயிரம் பேர் புறப்பட்டு விட்டார்கள். 

கூட்டம் கூட்டமாக சிலர் அந்த அரங்கில் நுழைவதைப் பார்த்து என்னதான்
நடக்கிறது என்று  உள்ளே வந்த சீமாச்சு  வெளியேறவில்லை. மனதுக்குள்
சொல்லிக்கொண்டான். நாம்தான் கிராமத்தில் ஜாவா பைக் ஒட்டி 
இருக்கிறோமோ, இது போதாதா கடைசி வரையில் பார்த்து விடுவோம் 
என்ற முடிவோடுதான் இருந்தான். 

முக்கியமான பல்கலைக்கழகம் எதிலாவது எம்.பி.ஏ  படித்திருக்க வேண்டும்  என்ற அடுத்த நிபந்தனையைக் கேட்டு மேலும் ஒரு ஆயிரம் 
 அகன்றார்கள். தட்டுதடுமாறி பி.சி.ஏ  பாஸ் செய்து குருட்டு அதிர்ஷ்டத்தில்   காம்பஸ் இன்டர்வியுவில் வேலையும் கிடைச்சு, 
டீமில் அமெரிககா போக வேண்டிய ஆளுக்கு அம்மை போட்டு நாம
நியுயார்க்கே வந்துட்டோம், கடைசி வரை என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்
என்பதுதான்  சீமாச்சுவின் முடிவு.

ஐநூறு பேரையாவது நிர்வகித்த முன் அனுபவம் வேண்டும் என்ற அடுத்த
நிபந்தனையை பில் கேட்ஸ் சொல்ல ஆயிரத்து ஐந்நூறு பேர் காலி. உன் ஒருத்தனை மேய்க்கறதுக்கு  ஆயிரம் குரங்கை மேய்க்கலாம் என்பதுதான்
காலேஜில் சீமாச்சுவுக்கு அடிக்கடி விழும் திட்டு. நான் இரண்டு நிர்வாகிக்கு  சமம் அப்டின்னு சீமாச்சு காலரை தூக்கி விட்டுக்கிட்டான். 

அடுத்த கேள்வி இன்னும் கொஞ்சம் மோசமாக இருந்தது. இந்த தலைமை 
அலுவலகமே  பெல்கிரேட் நகரில்தான் அமையப்போகிறது. ஆகவே 
செர்போ - குரோட்  மொழி பேசுபவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான்
சீமாச்சுவையும் மற்ற ஒரு நபரையும் தவிர  அனைவரும் காலி. 
பில்கேட்ஸ் மகிழ்ச்சியோடு  இருவரிடமும் வந்து கைகுலுக்கி  நீங்கள்
இருவரும் செர்போ - குரோட் மொழியில் பேசிக்கொள்ளுங்கள், புரியா
விட்டாலும் நான் கேட்கிறேன் என்றார்.

இன்னொரு நபர் பக்கம் திரும்பி சீமாச்சு கேட்டான் 

எந்த ஊரு, என்ன பேரு

நான் முருகேசு, ஈரோட்டுப் பக்கம் கிராமம் என்றான் அவன்.

தமிழன் தமிழன்தான்


பின் குறிப்பு ; எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின் அஞ்சல். வாய் விட்டு
சிரித்தேன். தமிழில் அளித்துள்ளேன்.
 

2 comments: