Thursday, March 3, 2011

சேரன் பிரதர்சை கலைஞர் மறந்தது ஏன்?

ஸ்டாலினும் அழகிரியும்  ராமர், லட்சுமணர் போல ஒற்றுமையாக  இருங்கள் என்று  சொல்ல மாட்டேன். ராவணர், கும்பகர்ணன்  போல 
ஒற்றுமையாய்  இருங்கள்  என்றுதான்  வாழ்த்துவேன்  என்பது  
கலைஞரின்  சமீபத்திய  டயலாக்.  அப்பா! இதிலிருந்து  எத்தனை 
கேள்விகள் வருகிறது  தெரியுமா? பதிவெழுதுபவர்களை  வாழ வைக்கும்
கலைஞர் வாழ்க! 

கேள்வி  1 

ஸ்டாலின், அழகிரி  இதிலே யார் ராவணன், யார் கும்பகர்ணன்? 
சீதையை கடத்தி வந்தது போல யார் யாரை கடத்தி வந்தார்கள்? 
தூங்கு மூஞ்சி  கும்பகர்ணன் யார்? கனிமொழிதான் சூர்ப்பனகையா? 
  
கேள்வி 2 
ராமாயணம்  ஒரு கற்பனைக்கதை, ராமர் ஒரு கற்பனைப்பாத்திரம் 
என்பது  கலைஞரின் வாதம்.  இதை நானும் நூறு சதவிகிதம் ஏற்றுக் 
கொள்கிறேன்.  ராமர் கற்பனை என்கிற போது  ராமரோடு சண்டை 
போட்ட  ராவணனும்  கற்பனைப் பாத்திரம்தான். வாழும் மனிதர்களுக்கு
ஏன் கற்பனைப்பாத்திரங்களை  உதாரணமாக சொல்ல வேண்டும்? 

கேள்வி 3 

சகோதரப்பாசத்திற்கு   உண்மையிலேயே வாழ்ந்த சேரன் செங்குட்டுவன், 
இளங்கோ அடிகளை  உதாரணமாக ஏன் கலைஞர் சொல்லவில்லை? 
சிலப்பதிகாரத்தை கரைத்துக் குடித்தவருக்கு  இந்த உதாரணம் நினைவிற்கு   வராமல் ராமாயணம்  ஏன் நினைவிற்கு  வந்தது? மருந்து 
குடிக்கும் போது குரங்கை  நினைக்காதே  என்ற வைத்தியர் சொல் 
கேட்டவன் நிலை போல ஆகி விட்டாரோ அவர்? 

ஒரு வேளை  சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள் என்று சொன்னால்
மணிமுடிக்கு ஒருவர், துறவறத்திற்கு ஒருவர் என்ற அர்த்தம் வந்து விடுமோ?  குடும்பத்தின் குழப்பம் மேலும் அதிகமாகுமோ? 

  

1 comment:

  1. கலைஞர் மீது அப்படி என்ன கோபம் ? அடிக்கடி அவர்தான் மாட்டுகிறார்!
    ஆனால் கனிமொழி சூர்ப்பனகை சூப்பர்

    ReplyDelete