Saturday, August 12, 2023

என் உணவு ஆட்டுத்தாடியின் சாய்ஸ் அல்ல!

 


 திருவண்ணாமலையில் மேடையில் சாமியார்கள் சூழ பேசிய ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரவி, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அமைந்துள்ள 17 கிலோ மீட்டர் முழுதும் அசைவ உணவகங்களை மூட வேண்டும் என்று பேசியுள்ளது.

போகிற இடங்களில் எல்லாம் விஷத்தை கக்குவது என்று வெறியோடு அலையுது அந்த ஜந்து.

திருவண்ணாமலை என்பது கோயிலும் மலையும் சார்ந்த நகரம் மட்டுமல்ல. ஒரு மாவட்டத்தின் தலை நகரம். சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் ஊர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களை மட்டும் நம்பியுள்ள ஊர் அல்ல. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஊர். இரண்டு லட்சம் மக்கட்தொகை கொண்ட ஊர். அவர்களில் மிகச் சிறுபான்மை சதவிகித மக்கள் வேண்டுமானால் தாவர உணவு சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.

அதே போல திருவண்ணாமலை கோயிலுக்காக மட்டும் எல்லோரும் அங்கே செல்வார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்ய அல்ல, ஆலோசனை சொல்லக் கூட வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

ஆட்டுத்தாடிக்கு பிடிக்கவில்லையென்றால் அது வேண்டுமானால் சாப்பிடாமல் இருக்கட்டும். அடுத்தவன் தட்டை எட்டிப் பார்க்கும் அருகதை கிடையாது.

இப்படியே போனால் ராஜ்பவன் வாசலில் ஒரு மட்டன், சிக்கன், பீஃப் பிரியாணி திருவிழா நடத்த வேண்டும்.

அந்த எலும்புத் துண்டுகளை ரெவிக்கு பார்ஸல் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment