Monday, August 14, 2023

சுதந்திர தின மிட்டாய் திங்கும் முன் . . .

 



சுதந்திர தின கொடியேற்று விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்காகத்தான் எங்கள் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

 வழக்கமாக 8 மணிக்கு நடக்கும் கொடியேற்று விழாக்களை இப்போது 8.30 மணி என்று சில வருடங்களாக மாற்றி விட்டார்கள்.

 ஆமாம்.

 அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகும் வரை பாஜகவினர் மதிக்காத, காவி நிறத்துக்கு மட்டும் மாற்ற வேண்டும் என்று சங்கிகள் துடிக்கின்ற மூவர்ணக் கொடியை டிமோ ஏற்றி குண்டு துளைக்காத மேடைக்குப் பின் நின்று வாயால் வடை சுடுவதை நீங்கள் கேட்க வேண்டுமென்பதற்காக மற்ற இடங்களில்  முப்பது நிமிடம் தாமதமாக கொடியேற்றப்பட வேண்டும் என்று உத்தரவு.

 என்னைப் போலவே நீங்களும் டிமோ வடை சுடுவதை பார்க்க விருப்பப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

 அதற்குள்ளாக சுதந்திர தினம் தொடர்பாக எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் சில பகுதிகளை படியுங்கள்.


 இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 2023 அன்று கொண்டாட உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் சக குடிமக்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  

*பெரும் சாதனை*

நாடு சுதந்திரமடைந்த 76 ஆண்டுகளில் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்திய சமூகத்தின்  மிகப்பெரிய வேறுபட்ட தன்மைகளைக் கருத்தில் கொண்டு பலர் அதன் ஒற்றுமை பற்றி சந்தேகித்த போதிலும்  இன்றும் ஒற்றுமையாக இருப்பதே இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும்நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதரத்தினையும் மேம்படுத்துவதிலும் நாடு வேகமாக முன்னேறுவதற்கும் அமைதி, ஒற்றுமை அவசியம் என்பதையும் நாம் 76 ஆண்டுகளில் கற்றுக்கொண்டோம்.

*எதிர் எதிர் தோற்றம், ஆனால் ஒரே நோக்கம்*

பிரிவினையில் பிரிட்டிஷ், முஸ்லீம் லீக், இந்து மகாசபை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் பங்கு வரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுஇன்று சரித்திரமே திருத்தி எழுதப்படுகிறது என்பது வேறு விஷயம். அனைத்து தரப்பினரின் பங்கையும் விரிவாக விவாதிப்பது நோக்கம் அல்ல, எனவே இங்கு பகுப்பாய்வு சுருக்கமாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஆழமான பிளவுகள் உருவானது என்பது உண்மைஆனால் இது முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபா ஆகிய அமைப்புகள் வங்காளம், சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் கூட்டாக மாகாண அரசாங்கங்களை நடத்த கூட்டணி அமைப்பதை தடுக்கவில்லை

முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபா ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்டிருந்தன. மேலும் அவை சமூகங்களை தேசிய இனங்களாக மாற்றினஇருவரும் தேசிய சுதந்திர போராட்டத்தில் இருந்து விலகி நின்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு உடந்தையாக இருந்தனர்இந்துக்களும், முஸ்லீம்களும் இரு வேறு தேசிய இனங்கள் என்றும் அவர்களால் நிம்மதியாக இணைந்து வாழ முடியாது என்றும் இருவரும் கருதினர்ஜின்னாவின் முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கு தனி நாடு கோரும்போது, இந்து மகாசபை இந்துராஷ்டிரத்தினை நிறுவ விரும்பியது. அவர்கள் இருவரும் காலனித்துவ சக்தியால் அதனுடைய சொந்த நலனுக்காக கையாளப்பட்டனர். இவைதான் பிரிவினைக்கு வழிவகுத்த காரணிகள்

*மதச் சார்பற்ற தேசம்*

பிரிவினை பயங்கர நினைவு தினத்தை அனுசரிக்கும்போது இந்த பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கை குடிமக்களுக்கு விளக்க வேண்டும்.  பாகிஸ்தான் ஒரு மதவழி ஆட்சி நாடாக மாறியபோது, நமது தேசிய இயக்கத்தின் தலைவர்கள் *இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயகமாக* இருக்க உறுதியளித்தனர்

இரு சமூகங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள் பிரிவினைக்கு எதிராக இருந்தனர் என்பதும், ஆங்கிலேய காலனி ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெறுவதில் அவர்கள் பெரும்பங்காற்றினர் என்பதும் உண்மைஅதன்பின் நடந்த நிகழ்வுகள், மதம் ஒருங்கிணைக்காது என்பதையும், மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசு 25 ஆண்டுகளுக்குள் சிதைந்து, கிழக்கு பாகிஸ்தான் சுதந்திர தேசமாக மாறி, வங்கதேசம் என்று பெயர் சூட்டிக் கொண்டது என்பதையும் நிரூபித்துள்ளது. இன்று இந்தியா மீண்டும் பெரிய அளவிலான வன்முறைகளைக் காண்கிறது. மணிப்பூர் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போரில் உள்ளதுவகுப்புவாத வன்முறை ஹரியானா சமூகத்தை பிளவுபடுத்தியுள்ளதுஇந்த இரண்டு இடங்களிலும், அரசு உடந்தையாக உள்ளது அல்லது அரசே இல்லை. மணிப்பூர் அரசு மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றம் வலுக்கட்டாயமாகச் சொல்ல வேண்டியதாயிற்று. மணிப்பூர் காவல் துறைக்கும், அசாம் ரைபிள்ஸ் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  

*பன்முகத் தன்மைக்கு பாதுகாப்பு*

நாடு முழுவதும் வெறுப்பு அரசியலால் நிறைந்துள்ளதுசாதி மற்றும் பாலினக் கொடுமைகள் குறையாமல் தொடர்கின்றனஇந்தியாவின் பன்முகத் தன்மையை ஒரே மாதிரியாக மாற்ற முயற்சிக்கப்படுகிறதுபல மத, பன்மொழி அடையாளங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மைக்கான அங்கீகாரமும் மரியாதையும் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாதுஇந்த *பன்மைத்துவத்தின் மீதான தாக்குதல் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பை* ஏற்படுத்தும்வெறுப்பும் மதவாத வன்முறையும் பிளவுகளை உருவாக்கி பிரிவினை வாதத்தை வளர்க்கிறது என்பதை பிரிவினையின் படிப்பினைகள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன

எனவே, பிரிவினைவாத சக்திகள் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகப் போராடி நாட்டின் ஒற்றுமையைக் காக்க இந்திய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

*சிறந்த தேசமாக திகழ செய்வோம்!*

77 வது சுதந்திர தினத்தில், *இந்தியாவை ஒரு சிறந்த தேசமாக உருவாக்க அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து** பாடுபடுவோம்தேச விடுதலையின் தியாகிகளுக்கும், பிரிவினையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த கோடிக்கணக்கான மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். *ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கும், அனைத்து இந்தியர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும்* நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.

ஹரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஆதிக்க ஜாதி அமைப்புக்களின்  மஹா பஞ்சாயத்து  கலவர பேரணியை தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்துள்ளது.  மணிப்பூரில் அமைதியை உருவாக்க ஒன்றிய அரசுக்கோ அம்மாநில அரசுக்கோ  எந்த சிந்தனையும் இல்லை.

 சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாக பிரிவினை கோர நாள் என்ற ஒன்றின் மூலம்   வெறுப்புணர்வை விதைத்துள்ளது ஒன்றிய அரசு.  பன்முகத் தன்மை என்ற உயரிய விழுமியத்தை மொழி, மதம், உணவு என்று அனைத்திலும் சிதைக்க முயற்சிக்கிறார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்தை பாதுகாக்க நம் முன்னே உள்ள முக்கியமான கடமை ஒன்றுதான்.

அடுத்த சுதந்திர தினத்தன்று டிமோ வோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ கொடியேற்ற வாய்ப்பு தராத அளவிற்கு தேர்தலில் அவர்களை முறியடித்திட வேண்டும்.

அதுதான் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

அந்த உறுதியை மனதிலிருத்தி சுதந்திர தின மிட்டாயை மகிழ்வுடன் சாப்பிடுவோம்.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.


பின் குறிப்பு

கடந்தாண்டு தென் மண்டல மாநாடு நடந்து கொண்டிருந்தது. 14 ம் தேதி இரவு கலை நிகழ்ச்சிகள் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

அந்நிகழ்வின் புகைப்படங்கள் கீழே . . .








No comments:

Post a Comment