புது டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுர்ஜித் பவன் கட்டிடத்தில் நுழைந்த கிரிமினல் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் அங்கே நடந்து கொண்டிருந்த கருத்தரங்கு ஒன்றை தடுத்துள்ளது.
நேற்று மீண்டும் அத்து மீறி நடந்து கொண்டிருந்த கட்சி உறுப்பினர்களுக்கான வகுப்புக்கு இடையூறு செய்துள்ளது.
அனுமதி வாங்காமல் நடத்தப்பட்டது என்று சால்ஜாப்பு வேறு சொல்கிறது.
ஒரு கட்சி அலுவலகத்திற்குள் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் எவனின் அனுமதியும் அவசியமில்லை. சட்டத்தில் இல்லாத ஒன்றை சொல்கிறது கிரிமினல் அமித் ஷாவின் போலீஸ்.
டிமோ கொஞ்ச நாள் முன்பாக போட்டிக்கு பிள்ளை பெற என்.டி.ஏ கூட்டத்தை நடத்தினாரே, அதற்கு போலீஸ் அனுமதி உண்டா?
மார்க்சிஸ்டுகளை கண்டு உள்ளுக்குள் அஞ்சுவதால்தான் இப்படி அயோக்கியத்தனம் செய்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் இரண்டு நாட்களாக ஒரு குழு பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் மணிப்பூர் சென்று பல்வேறு தரப்பு மக்களோடு உரையாடி ஆய்வு செய்கின்றனர்.
மணிப்பூர் பக்கம் தலை கூட வைத்துப் படுக்காத 56 இஞ்ச் மார்பனின் கோழைத்தனம் மக்களுக்கு நினைவுக்கு வருமல்லவா?
அதனால்தான் இந்த கேவலமான நடவடிக்கை.
கவிஞர் தோழர் நந்தலாலா, ஒரு கலை இரவில் பேசுகிற போது சொன்னார்.
"சிவப்பைக் கண்டு மனிதர்கள் மிரள மாட்டார்கள், மாடுகள்தான் மிரளும்"
இவர்களோ தடித்தோல் கொண்ட எருமை மாடுகள். அதனால்தான் இவைகள் எசிவப்பைப் பார்த்து மிரள்கின்றன.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete56 இஞ்ச் மார்பன் போல கோழைத்தனமாய் ஒளிந்து கொண்டு அனாமதேயமாக வாந்தி எடுத்துள்ளவனே, தைரியமிருந்தால் உன் சொந்த அடையாளத்தோடு (முக நூல் ஐடி உட்பட) வா, உரிய பதில் தருகிறேன்.
Delete