ஃப்ரண்ட்லைன்
முன்னாள் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கர் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.
இறந்தவர்களுக்கு சிகிச்சையும் பணமும் அளிக்கும் விஸ்வகுரு
பாஜகவினர் அடிக்கடி பெருமையுடன் பேசும் திட்டம் ஆயுஷ்மான்
பாரத். இதற்கு மகுடம்
சூட்டும்’ வகையில் இந்தியாவின் தலைமைக் கணக்காயர் திட்டத்தில்
நடக்கும் மாபெரும் தில்லுமுல்லுகளை அம்பலப் படுத்தியிருக்கிறார்.
திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற 88760 நோயாளிகள் சிகிச்சை
நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஆனால் இவர்களுக்கு புதிய சிகிச்சை அளிக்கப்
படுவதாகக் கூறி 2,14,923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் வந்திருக்கின்றன.
அதற்கான பணமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இது மட்டுமல்ல. ஒரே செல் பேசி எண்ணில் திட்டத்தில் பதிவு
செய்தவர்களின் எண்ணிக்கை 7.5 லட்சம் மட்டுமே. ஏழு ஆதார் எண்களின் அடிப்படையில்
4761 பேர்கள் பதிவு செய்திருப்பதாகவும் ஒரு கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில். 1.24 கோடி போலிப் பயனாளிகள். இவர்களின் பெயர்கள் 1,86,855 செல் பேசி
எண்களுடன் இணைக்க பட்டுள்ளன.
இது போன்ற ஊழல் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஊழல்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறது என்று அடிக்கடி
பேசுகிறார் பிரதமர்.
ஆனால் ஊழல்தான் உங்கள் கட்சியினரை ஒன்றாக வைத்திருப்பது போல்
தெரிகிறது.
சார் அது குரங்கு பொம்மையில்லை.
கண்ணாடி!
மற்ற ஊழல் பற்றியெல்லாமும் அவசியம் எழுதனும்.
No comments:
Post a Comment