Thursday, August 17, 2023

என்னது ஸ்ரீ சரோஜ் இல்லமா?

 


மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக எங்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றி அதனை அவருக்கு அனுப்பி வைத்தோம்.

 அதற்கு பதில் வந்தது.

 தீர்மானம் சங்க லெட்டர் பேடில்தான் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. லெட்டர் பேட்டில் எங்கள் சங்கத்தின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரிதாக இருக்கும். அதன் கீழே விலாசம் இருக்கும். ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட  தீர்மானத்தில்  தலைவர் கையெழுத்திட்டிருந்தார்.

 குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் யாருக்கு அனுப்பப் பட்டிருந்தது என்று பாருங்கள்.

 


தீர்மானத்தில் கையெழுத்திட்ட தலைவருக்கும் அனுப்பப்படவில்லை.

சங்கத்தின் பெயரிலும் அனுப்பப்படவில்லை.

 மாறாக எங்கள் சங்க அலுவலகக் கட்டிடமான சரோஜ் இல்லம் பெயரையே அனுப்புனராகக் கருதி அனுப்பப்பட்டுள்ளது.

 குடியரசுத் தலைவர்தான் தன் பொறுப்பை மறந்து விட்டார் என்றால்

குடியரசுத் தலைவர் அலுவலகம் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் செயல்படுகிறது.

 இதில் ஒரு அண்டர் செகரட்டரி ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். அநேகமாக அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கக் கூடும்.

 கொடுமை!

 பிகு : முகப்பில் உள்ளதுதான் எங்கள் சங்கக் கட்டிடம் “சரோஜ் இல்லம்”

No comments:

Post a Comment