மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி மோடிக்கு எவையெல்லாம் தெரியாது என்று ஒரு நீண்ட பட்டியலை அளித்ததை பகிர்ந்து கொண்டிருந்தேன்.
மோடிக்கு தெரிந்ததெல்லாம் என்னவென்று ஒரு பட்டியலை அளிக்க நான் முயற்சி செய்துள்ளேன். (இதை எழுதி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலான போதிலும் தொடர்ந்து கிடைத்து வந்த செய்திகள், இதனை பகிர்ந்து கொள்ள தாமதிக்கும் சூழலை உருவாக்கி விட்டது.)
கனவுக் காட்சிகளில் கதாநாயகர்கள் அணிவது போல விதம் விதமாக
பல்வேறு வண்ணங்களில் பல கெட்டப்புகளில் ஆடை அணிய மோடிக்கு தெரியும்.
போட்டோவிற்கு போஸ் அளிக்க நன்றாக தெரியும். போட்டோ நன்றாக வர
மயில், வாத்து, நாய் மற்றும் தன்னுடைய அம்மா போன்ற செட் ப்ராப்பர்டிகளை நன்கு
பயன்படுத்த மோடிக்கு தெரியும்.
சொகுசு விமானத்தில் நாடு நாடாக பயணிக்க மோடிக்கு தெரியும்.
தேசத்தின் சொத்துக்களை எல்லாம் தன் எஜமானர்கள் அம்பானி,
அதானிக்கு மடை மாற்றி விட தரகு வேலை பார்க்க மோடிக்கு தெரியும்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் படிக்கட்டுக்களை வணங்கிக் கொண்டே
நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபுகளையும் சீரழிக்க மோடிக்குத்தான்
தெரியும்.
தேர்தல் வரும் நேரத்தில் மத உணர்வுகளை உசுப்பி விடவும் ராணுவ
வீரர்களை பலி கொடுத்து போலி தேச பக்தியை உசுப்பி விடவுமான கீழ்த்தர உத்திகள்
மோடிக்கு நன்றாகவே தெரியும்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, தன் செல்வாக்கு சரியும்
நேரத்தில் எல்லாம் தன் உயிருக்கு ஆபத்து என்றொரு கட்டுக்கதையை பரப்பவும் மோடிக்கு
மிக நன்றாகத் தெரியும்.
மொத்தத்தில் மோடிக்கு தெரிந்தது எல்லாமே இந்த நாட்டிற்கு
கொஞ்சமும் தேவை இல்லாத ஆணிகள்தான்.
No comments:
Post a Comment