சிங்கப்பூர் பிரதமருக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏன்?
“நேரு காலத்திய இந்தியா அல்ல இப்போதைய இந்தியா. பாதிக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள். பாலியல் வன்புணர்ச்சிக் குற்றங்கள் செய்தவர்கள் கூட உண்டு. அது மாதிரியான மோசமான நிலைமைக்கு சிங்கப்பூர் சென்று விடக் கூடாது”.
இந்தியாவைப் பற்றி இப்படி சொல்லி விட்டார்களே என்று எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் இது போல பேச வைத்தது நீங்கள்தானே மிஸ்டர் மோடி! பொறுக்கி எடுத்து பொறுக்கிகளை தேர்தலில் நிற்க வைத்தால் அப்படித்தானே சொல்வார்கள்! உங்கள் கட்சியில் எவன் யோக்கியன்? திருடனும் கொள்ளையனும் கடத்தல் காரனும் பாலியல் குற்றவாளியும் ஊழல் பேர்வழியும் மோசடிப் பேர்வழியும்தானே உங்கள் கட்சி உறுப்பினர்கள்!
பொய்களைத் தவிர நீங்கள் என்றைக்காவது உண்மை பேசியதுண்டா? பொய்களை பரப்புவதற்கென்றே ஒரு ஐ.டி விங். அதை அப்படியே நம்பி பகிர்ந்து கொள்ள முட்டாள் கூட்டம். இதுதானே உங்கள் கட்சி அமைப்பு!
உலக அளவில் பல நாடுகளில் விசா மறுக்கப்பட்டு தலை குனிவை தேடித்தந்ததுதானே உங்கள் யோக்கிய லட்சணம்! எந்த முகத்தோடு நான் வெளி நாடுகளுக்குப் போவேன் என்று வாஜ்பாயை புலம்ப வைத்தது நீர்தானே!
அதனால் அடுத்த நாட்டு ஆள் சொல்லி விட்டார் என்று கோபப்படுவதற்குப் பதிலாக இனியாவது நீங்களும் உங்கள் கூட்டமும் யோக்கியமாக, நேர்மையாக நடந்து கொள்ள முயறசியுங்கள்,
என்ன! உங்களாலும் உங்கள் திருடர் கூட்டத்தாலும் அது முடியாது. ஏனென்றால் நீங்கள் எல்லாம் பிறவி கிரிமினல்கள் . . .
No comments:
Post a Comment