ப.சிதம்பரத்தோடு ஏராளமான முரண்பாடுகள் உண்டு என்பதை முதலிலேயே
சொல்லி விடுகிறேன். ஆனாலும் நான் பார்த்த அவரது ஒரு நாடாளுமன்ற உரை சிறப்பானது.
நான் துக்டே துக்டே கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று பிரதமர்
கூறினார். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
ஏனென்றால் துக்டே துக்டே கூட்டமென்றால் யார் என்ற கேள்விக்கு
இதே அவையில் “எங்களிடம் விவரம் எதுவும் இல்லை” என்று மத்திய அமைச்சர் பதில் சொல்லி
விட்டார்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த
கேள்விக்கும் பதில் “எங்களிடம் விவரம் எதுவும் இல்லை”
மருத்துவ மனை படுக்கை வசதிகள் குறித்த கேள்விக்கும் பதில்
“எங்களிடம் விவரம் எதுவும் இல்லை”
நதியில் அப்படியே இழுத்து வீசப்பட்ட சடலங்கள் குறித்த
கேள்விக்கும் பதில் “எங்களிடம் விவரம் எதுவும் இல்லை”
எத்தனை புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து போனார்கள் என்ற கேள்விக்கும் பதில் “எங்களிடம் விவரம் எதுவும் இல்லை”
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி விட்டதா என்ற கேள்விக்கும்
அதே “விவரம் ஏதுமில்லை” என்ற பதில்தான்.
இப்படி எதைக் கேட்டாலும் கிடைக்கிற ஒரே பதில் “எங்களிடம் விவரம் எதுவும் இல்லை”
ஆக இது விவரம் ஏதுமில்லாத அரசாங்கம். NO DATA AVAILABLE
GOVERNMENT. அதுதான் N.D.A அரசு.
No comments:
Post a Comment