தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் சிறப்பான
வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது மகிழ்வைத் தருகிறது.
கூட்டணியிலும் உடன்பாடு எட்டப்படாத சில மாவட்டங்களில்
தனித்தும் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வெற்றி
மகிழ்ச்சியோடு மன நிறைவையும் அளிக்கிறது. சென்னை மாநகராட்சியில் எல்லாம் இம்முறை
நிறைய தோழர்கள் மாமன்றத்துக்கு செல்கிறார்கள்.
கோட்சேவின் புகழ் பாடும் காந்தி கொலையை போற்றும் ஒரு நிஜமான
தேச விரோதப் பெண்மணி சென்னையில் வெற்றி பெற்றது மிகவும் நெருடலாக உள்ளது.
இப்படிப்பட்ட மோசமானவர்களை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு மாம்பலம் மக்களின் தரம்
கீழிறங்கி உள்ளது.
எச்சரிக்கை அதிகமாக வேண்டிய தருணம் இது.
சரி, சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்ப்போம்.
வாக்காளப் பெருமக்கள், பல ஊர்களில் பல வார்டுகளில் 1,2,5,10 என்ற அளவில் பாஜகவிற்கு வாக்கு அளித்துள்ளனர். ஒற்றை ஓட்டு பாஜக என்பது மீண்டும்
நிருபிக்கப்பட்டு விட்டது.
எடப்பாடி, ஓ.பி.எஸ், வானதி ஆகியோரின் சொந்த வார்டுகள் அவர்களின்
கட்சி வேட்பாளர்கள் பரிதாபமாக தோற்றுள்ளனர். அநேகமாக ரோஷமுள்ள வானதி அம்மையார்
இந்நேரம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பார்.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான கொங்கு நாடு
(அண்ணன் மாலன் மொழியில் கொங்ககம்) கோரிக்கைக்கு இத்தேர்தல் முடிவுரை எழுதி
விட்டது.
பாஜக முகவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணை ஹிஜாபை அகற்றச் சொல்லி பிரச்சினை
செய்து பின்பு அவரே வெளியேற்றப் பட்ட
வார்டில் அந்த முகவரின் அம்மாவும் பாஜக வேட்பாளருமான பெண்மணிக்கு கிடைத்தது ஜஸ்ட்
பத்து வாக்குகளே!
அதே நேரம் வேறு ஒரு ஊரில் வேறு ஒரு வார்டில் வெற்றி பெற்ற ஒரு
பாஜக வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழை அளித்தது ஹிஜாப் அணிந்த ஒரு அதிகாரி.
ஒரு வோட்டு கூட பெறாத வேட்பாளர் என்ற பெருமை சிவகங்கையில்
மக்கள் நீதி மைய வேட்பாளருக்கு கிட்டியுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஒரு திருநங்கை வெற்றி
பெற்றுள்ளார் என்பது ஒரு நல்ல விஷயம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteகருங்காலி நாயே, நீ யாருன்னு முதல்ல சொல்லுடா முண்டம்.அயோக்கிய அனாமதேய திருட்டுப் பயல் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏண்டா அறிவு கெட்ட முண்டம், அயோக்கிய அனாமதேயத்துக்கெல்லாம் பதில் கிடையாதுன்னு சொன்னா புரியாதா? தைரியமிருந்தா உன் சொந்த அடையாளத்தோட வா, பதில் சொல்றேன். ஆனா உன்னால் முடியாது. நீ யாரு! உன் கூட்டாளிங்க யாரு! அவ்ங்களோட உண்மையான நிறம் என்ன! என எல்லாமும் தெரியும். உன்னை உசுப்பேத்தி விடறவனை ஒழுங்கா இருக்க சொல்லு
Delete