*நாளொரு கேள்வி: 25.01.2022*
தொடர் எண்: *604*
இன்று நம்மோடு சமூக செயற்பாட்டாளர் *இரா. சிந்தன்*
##########################
*நிலாவின் தொலைவில் பாதி*
*மறுக்கப்படும் பங்கீட்டு நீதி*
கேள்வி: வளங்கள் ஒருபக்கம், வறுமை மறுபக்கம் என்கிற வர்க்க பாரபட்சங்களின் உச்ச பட்ச வெளிப்பாடுகள் என்ன?
*இரா.சிந்தன்*
கொரோனா காலத்தில், உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடீஸ்வரர் உருவாகியுள்ளார்.
பெரும் பணக்காரர்கள் 10 பேருடைய சொத்துக்கள் 100 % அதிகரித்துள்ளன. உலகில் வாழும் வெறும் 2755 பெரும் பணக்காரர்கள், கடந்த 14 ஆண்டுகளில் சம்பாதித்ததை விடவும் அதிகமான தொகையை கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேர்த்துள்ளார்கள்.
மறுபக்கத்தில் 16 கோடிப் பேர் புதிதாக அதீத வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2வது உலகப் போரில் மடிந்த எண்ணிக்கைக்கு நிகரான மரணங்கள் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ளன.
அமேசான் நிறுவன முதலாளி ஜெப் பெசோஸ் இந்தக் காலத்தில் சேர்த்திருக்கும் சொத்துக்களின் மதிப்பை மட்டும் கணக்கிட்டால், அது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆகும் செலவிற்கு சமமான தொகை ஆகும். இப்படி சொத்துக் குவித்திருக்கும் உலகின் 10 பெரும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை செலவு செய்யலாம் என முடிவு செய்தால், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்தாலும் கூட, அது தீர்ந்து போக 414 ஆண்டுகள் ஆகும்.
அவர்கள் தங்களின் சொத்துக்களை அமெரிக்க டாலராக அடுக்கி அதன் மீது அமர்வது என்று முடிவு செய்தால் அந்த உயரம் பூமியில் இருந்து நிலாவிற்குச் செல்லும் தொலைவில் பாதியாக இருக்கும் என்கிறார்கள்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment