Monday, February 14, 2022

*"நியாயவான் முகமூடிகள்" கழன்று விழும் போது

 



*நாளொரு கேள்வி: 14.02.2022*

தொடர் எண் :*624*

இன்று நம்மோடு தென் மண்டல  இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
########################

*"நியாயவான் முகமூடிகள்" கழன்று விழும் போது*

கேள்வி: அரசாங்கம் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு ஆதரவான நிலையையே தொடர்ந்து எடுக்கிறதே!

*க.சுவாமிநாதன்*

வாதங்களை முன் வைப்பதோ,
விவாதங்களை நடத்துவதோ தவறு இல்லை. ஆதரவோ, எதிர்ப்போ அது குறித்த உரையாடல்கள் வேண்டும். அரசு விவாதத்திற்கு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பம். *திறந்த மனதோடும், ஜனநாயக உணர்வோடும்* அவை அமைய வேண்டும். ஆனால் அரசு ஒரு வழிப் பாதையில் கருத்துகளை திணிக்க முயல்கிறார்களே தவிர உணர்வு பூர்வான உரையாடலுக்கு தயாராக இல்லை. 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் *அமானுல்லாகான்* அவர்களின் கருத்து முக்கியமானது. 

 _"அரசு அத்தகைய விவாதங்களை நடத்த அச்சப்படுகிறது. அதனால்தான் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான மசோதாக்களை தனியாக கொண்டு வரவில்லை. மாறாக நிதி மசோதாவின் பகுதியாக கொண்டு வந்தார்கள். குறிப்பான மசோதா எனில் நாடாளுமன்ற விவாதங்களில் அரசின் கொள்கைகளின் சாயம் வெளுத்து விடும் என்று நினைத்தார்கள். ஆகவே அவர்கள் விவாதத்திற்கு தயாராக இல்லை. விவாதத்திற்கான வாய்ப்புகளை மறுத்தார்கள் என்பதே உண்மை."_  

காரணம் தொழிற் சங்கத்தின் பிரச்சாரம் *மக்களை சென்றடைந்து விட்டது* என்பதே காரணம். 

அரசு திறந்த மனதோடு இருக்கிறதா? எல்.ஐ.சி யின் *உள்ளார்ந்த மதிப்பை* (Embedded value) ஐ மதிப்பிடுவது பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. எல்.ஐ.சி இது குறித்த விவரங்களை விரைவில் *"செபி"* (பத்திர மற்றும் பங்கு சந்தை ஆணையம்) சமர்ப்பிக்கவுள்ளது. ஆனால் அது குறித்த விவரங்கள் பாலிசிதாரர்களுக்கு, பொது மக்களுக்கு வெளிப்படையாக பகிரப்படுகிறதா? 

ஆகவேதான் அண்மைக் காலத்திலும் நிறைய அறிவார்ந்தவர்கள், ஊடகங்கள் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக வருகிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்கள் உரிய இடத்தை இப் பிரச்சாரத்திற்கு தர மறுத்தாலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கருத்துக்களுக்கு இடம் கிடைப்பதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சிறு ஊடகங்கள், வலைத் தள ஊடகங்கள் லட்சக்கணக்கான மக்களிடம் எடுத்துச் செல்கின்றன. *தெலுங்கானா, சட்டிஸ்கர் முதலமைச்சர்கள்* பங்கு விற்பனைக்கு எதிராக பேசுகிறார்கள். ஆளும் கட்சியை தவிர எல்லா கட்சிகளும் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. 

தொழிற்சங்கங்கள், மக்கள் மத்தியில் விவாதத்தை தார்மீக துணிச்சலோடும், ஜனநாயக உணர்வோடும் முன்னெடுக்கின்றன. அரசாங்கம் அத்தகைய துணிவை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ள *அறுதிப் பெரும்பான்மையை மட்டுமே* துணையாக கொண்டு முன்னேற முனைகிறார்கள். அதற்கு நாடாளுமன்றத்திற்குள் ஜனநாயகத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தைக் கூட அபகரிக்கிறார்கள்.

*நியாயத்திற்கான போராட்டம்* அயர்வில்லாமல் தொடரும் போதுதான் சமூக அமைப்பின், ஆட்சி முறைமையின் போதாமைகளும் - வார்த்தைக்கும் நடப்பிற்குமான இடைவெளிகளும் வெளிப்படும். அது சில நேரம் ஆட்சியாளர்களுக்கு *குறைந்த பட்ச நியாயவான்களாக* காட்சி அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும். இது அரசியலில் மக்களின் பங்கேற்புக்கு ஒரு சிறந்த உதாரணம். 

நாடாளுமன்ற விவாதங்கள் தங்களின் "நியாயவான் முகமூடிகளையும்" கழற்றி விடும் கட்டத்திற்கு போய் விட்டால் அந்த வாய்ப்பையும் அதிகாரத்தில் இருப்போர் மறுதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். எல்.ஐ.சி பங்கு விற்பனை மீதான மக்கள் கருத்து அந்தக் கட்டத்தை எட்டி விட்டதாக அரசு நினைப்பதே அவர்களின் ஜனநாயக விரோத அணுகுமுறைக்கு காரணம். 

நாடாளுமன்ற *ஜனநாயகத்திற்கு அபாயம்* உழைப்பாளி மக்களிடம் இருந்து வராது; ஆனால் ஆளும் வர்க்கங்கள் தங்களின் குறுகிய நலன்களுக்கு அதைப் பயன்படுத்த முனையும் போதே அத்தகைய
அபாயம் எழும்.

இன்சூரன்ஸ் ஊழியர்களின் இடையறா போராட்டம் இத்தகைய அனுபவத்தை இந்தியாவின் உழைப்பாளி மக்களுக்கு தந்திருக்கிறது. 

*செவ்வானம்*

No comments:

Post a Comment