சீனத் தயாரிப்பான ராமானுஜர் சிலையை மோடியார் திறந்து வைத்த போது அணிந்திருந்த ஆடை போல வேறு யாரோ முன்னர் அணிந்திருந்தது போல ஒரு நினைவு. அது யார் என்று அப்போது நினைவுக்கு வரவில்லை.
இன்று உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த போதுதான் அமைதிப்படையின் இறுதிக்காட்சியில் அமாவாசை சத்யராஜ் மோடி அணிந்தது போலவே ஆடை அணிந்து ரஞ்சிதாவை திருமணம் செய்து யாகம் நடத்த முன் வருவார் என்பது நினைவுக்கு வந்தது. அரசியலில் உள்ள இடம் நிலைக்கவே கேரள நம்பூதிரிகள் கொண்டு அந்த யாகத்தை சத்யராஜ் நடத்துவதாக காட்சி செல்லும்.
இப்படி ஒரு ஆடை அணிந்து மோடி எந்த லட்சியத்திற்காக எந்த யாகத்தை அந்த வில்லங்க சாமியார் மூலம் செய்தாரோ?
ஆனால் ஒன்று மணிவண்ணனின் மேதைமையை பாராட்ட வேண்டும். மோடி போன்ற ஒரு கொடூர அரசியல்வாதியை, அரசியல் ஆதாயத்துக்காக எந்த அளவிற்கும் கீழிறங்க தயாராக இருக்கிற ஒரு பாத்திரத்தை மோடி அரசியலுக்கு வருவதற்கு முன்பே உருவாக்கியவரை பாராட்டுவது சரிதானே!
என்ன ரீல் அமாவாசையையும் விட ரியல் அமாவாசை அபாயகரமானவர்.
மோடியோடு ஒப்பிட்டால் அமைதிப்படை அம்மாவாசை எல்லாம் சாதாரணம்
ReplyDelete