மூத்த வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.
பதிவு சிரிப்பைத் தூண்டினாலும் அன்னா ஹசாரே இப்போது ஏன் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டே இருக்கிறார் என்பதற்கான நிஜமான காரணத்தை பதிவுக்குக் கீழே அளித்துள்ளேன்.
நானும் திரைப்பட நடிகர் ராஜேசும் அஜந்தா, எல்லோரா பார்த்து விட்டு வரலாம் என்று டூர் கிளம்பினோம்.
புனாவில் இருந்து ஸ்ரீரடி வரை போகக் கார் ஏற்பாடு செய்து இருந்தோம்.
போகிற வழியில் சில கிலோமீட்டர் தூரம் தென்புறம் போனால் அது தான் ஹன்னா அசாரே கிராமம் என்று டிரைவர் சொன்னதால் காரை திருப்பினோம்
அன்னே ஹசரா ஊரில் இல்லை.
அவர் சகோதரர் வயல்வெளியில் இருந்து எதையோ தோளில் தூக்கிக் கொண்டு வந்தார்.
சின்ன பழய காலத்து வீடு.
திண்ணையில் உட்கார வைத்து அன்போடு டீ கொடுத்தார்..
அங்கிருந்து 500அடி தூரத்தில் உள்ள ஒரு .பொதுக் கோயிலில் உள்ள ஒரு மூலை தான் அன்னா ஹசாரேயின் நிரந்தர வாசஸ்தலம்..
சாப்பாடு சகோதரர் வீட்டில் இருந்து வந்து விடும்..
வெள்ளைவெளேர் என்ற 2 திண்டுகளுடன் படுக்கை விரித்தே இருந்தது.
கோயிலின் வேறொரு மூலையில் பல விவசாயிகள் உட்கார்ந்து எதையோ சீரியசாக விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.
சின்னக் கோயில் தான்.
வெளியே மரத்தடியில் சில முதியவர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சுருட்டுப் புகைத்துக் கொண்டு இருந்தார்கள்.
அந்தக் குக்கிராமத்தையே அவர்கள் புகை நாறடித்து விட்டது.
அன்னா ஹசாரே திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்று அவர்கள் சொன்னதால் கிளம்பினோம்.
அப்போது ராஜேஷ் சொன்னார்.:-"அந்தப் படுக்கையை பார்த்தால் தூங்கிக் கொண்டே இருக்கத்தான் தோன்றும். எழுந்திருக்கவே விடாத சுகமான படுக்கை"என்று யதார்த்தமாக சொன்னார்.
ராஜேஷ் யதேச்சையாகச் சொன்னது தீர்க்கதரிசனம் போலாகி விட்டது.
அப்போது படுத்த அன்னா ஹசாரே எழுந்திருக்காமல் இன்னும் ஆழ்துயலிலேயே இருக்கிறார்.
மோடி ஆட்சிக்கு வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு நாக்பூரிலிருந்து தரப்பட்ட அசைன்மெண்ட். அதை நிறைவேற்றிய பின்பு அவர் உறக்கத்திற்குப் போய் விட்டார். அவ்வளவுதான் மற்றபடி ஊழல் எதிர்ப்பெல்லாம் வெறும் ஜூம்லா. அடுத்த பணி தரப்பட்டால் அப்போது அவர் உறக்கத்தை கலைக்கலாம். அது வரை கும்பகர்ணனின் உறக்கம் தொடரும்.
வரும் 14 முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறாரே.பார்க்கவில்லையா¿
ReplyDelete