Sunday, August 25, 2024

UPS - உழைப்பாளிகளின் வெற்றி

 


புதிய அல்லது தேசிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிணைந்த பென்ஷன் திட்டத்தை (UNIFIED PENSION SECHEME)  ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அறிவித்து உள்ளது.

பழைய பென்ஷன் திட்டத்திற்கும் புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இருந்த மிகப் பெரிய அநீதி நீக்கப்பட்டதுதான் யுபிஎஸ்.

பழைய பென்ஷன் திட்டத்தில் பலன் வரையறுக்கப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டத்தில் பங்களிப்பு வரையறுக்கப்பட்டதே தவிர பலன் என்ன வரும் என்பது தெரியாது.

இப்போது புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தில் 25 ஆண்டுகள் பணிக்காலம் உடைய ஊழியர் ஓய்வு பெறும் வேளையில் பெறும் அடிப்படை ஊதியத்தில் 50 % பென்ஷனாக வழங்கப்படும். 

ஓய்வூதியர் இறந்தால் அவர் பெறும் பென்ஷனில் 60 % குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்காக அரசின் பங்களிப்பு தற்போதுள்ள 14 % என்பதிலிருந்து 18 % ஆக உயர்த்தப்படும்.

2004 முதல் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வந்ததன் வெற்றி இது. இந்திய மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவை மைனாரிட்டியாக மாற்றியதன் விளைவு இது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களவைத் தேர்தலில் கவனம் பெற்றதன் காரணமாக நிகழ்ந்த மாற்றம் இது.

ஒன்றிணைந்த பென்ஷன் திட்டம் என்ற பெயர் மாற்றம் செய்து   பழைய பென்ஷன் திட்டத்தின் அடிப்படை பலனை அளிப்பதற்குப் பதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு  பழைய பென்ஷன் திட்டத்தையே விரிவு படுத்தியிருக்கலாம். ஆனாலும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதுவும் நடக்ககும், கண்டிப்பாக . . .


No comments:

Post a Comment