Saturday, August 17, 2024

அன்பான எதிரிகளுக்கு . . .

 


கடந்த சில மாதங்களாக சில நல்லவர்கள் என் மீது சில அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நல்லவர்கள் யாரென்பதும் அந்த நல்லவர்களை தூண்டி விடும் மிக நல்லவர்கள் யார் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நான் இருந்த இடத்திற்கு வருவதற்கு  வெறியோடு இருந்தவர்கள், தங்களின் முறைகேடுகளுக்கு தடையாக இருப்பதாக நினைத்தவர்கள், என்று பட்டியலே உள்ளது. அவர்கள் இங்கேயும் பல சமயம் அனாமதமேயமாக வந்து அம்பலப்படுவார்கள்.

இப்போது ஒரு புதிய முயற்சி நடந்துள்ளதாக சில தோழர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். உங்களின் பணி ஓய்வு நிம்மதியாக இருக்கக்கூடாது என்பதுதான் அந்த கும்பலின் நோக்கம் என்று சொன்னார் ஒரு தோழர்.

அந்த அன்பான எதிரிகளுக்கு ஒரு தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலே உள்ள படம் 19.07.1989 அன்று எடுக்கப்பட்டது.  நெய்வேலி கிளையில் ஒரு பிரச்சினைக்காக சங்கமாக தலையிட்டதற்காக அடியாட்கள் மூலம் கிடைத்த பரிசு.  உதட்டில் ஐந்து தையலும் பாதி உடைந்த பல்லும். அப்போது என் வயது 23.  இனி சங்கமெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மூளைச்சலவை செய்ய நடந்த முயற்சிகளுக்கெல்லாம் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், விடுமுறைக்குப் பின் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்வே வேலூரில் எங்கள் சங்கத்தின் இரண்டாவது பொது மாநாடுதான்.

ரௌடிகளை வைத்து மிரட்டியதற்கு அந்த சின்ன வயதிலேயே பயப்படவில்லை, இப்போது அவதூறுகளுக்கா பயப்படுவேன், அதுவும் இத்தனை வருட அனுபவத்திற்குப் பிறகு! 

அன்றைக்கு 1989 ல் அந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்கள் நிலைமை எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒருவர் இன்னொருவரின் சொத்தை அபகரிக்கும் பஞ்சாயத்தில் கொல்லப்பட்டார். இன்னொருவர் ஊழல் வழக்கில் இரண்டு வருடம் ஜெயிலில் இருந்தார். மூன்றாமவர் மஞ்சள் கடிதாசு கொடுத்து விட்டார்.

இப்போதைய  அன்பான எதிரிகளும் மேலே உள்ளவர்களைப் போன்ற நல்லவர்கள்தான். அதனால் அவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

"Let the dogs bark, the caravan moves on"

என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போலத்தான் என் பயணத்தை எந்த அவதூறுகளாலும் தடுத்து விட முடியாது.

தொடந்து தோற்றுக் கொண்டிருக்கும் என் அன்பான எதிரிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்😆😆😆😆😆😆

6 comments:

  1. வார்த்தைகளை தேடுகிறேன்,
    குள்ளநரி
    கொக்கரிப்பு
    சலசலப்பு
    அட்டை கத்தி
    செல்லா காசு

    ReplyDelete
  2. நெத்தியடி தோழா

    ReplyDelete
  3. நெத்தியடி தோழா

    ReplyDelete
  4. அப்படி என்ன எதிர்ப்பு தோழர்

    ReplyDelete
    Replies
    1. அனாமதஏயமாக இல்லாமல் உங்கள் அடையாளத்தை சொன்னால் நானே தொலைபேசி செய்து பேசுகிறேன்.

      Delete
    2. Really great Tholar

      Delete