இரண்டு நாட்கள் முன்பு தொடங்கிய சித்திரவதை இன்னும் முடியவில்லை.
ஒவ்வொரு முறை தொலைபேசி செய்யும் போது கர்புர் என்று மோடி கத்துவதை கேட்கும் சித்திரவதையைத்தான் சொல்கிறேன்.
சுதந்திர தினம் முடியவே போகிறது. ஆனால் சித்திரவதை இன்னும் ஓயவில்லை.
அய்யா மோடி முடியலை. ஒவ்வொரு முறையும் அடுத்தவர் அலைபேசியில் வந்து பேசுவது அநாகரீகமான செயல். இனியாவது அதை நிறுத்தவும்.
ஆமாம் இந்த அவஸ்தை பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தானே, முதலாளி அம்பானியின் ஜியோவில் கிடையாது அல்லவா? அவனிடம் சொன்னால் காலில் உள்ளது கைக்கு வந்து விடுமல்லவா!
No comments:
Post a Comment