இன்று
காலை அலுவலகத்திற்குள் நுழையும் போதே கோபம் தலைக்கேறியது.
“PARTITION
HORRORS REMEMBERENCE DAY” என்ற எழவு பெயரில் சில பேனர்களை கண்காட்சியாக அமைத்துக்
கொண்டிருந்தார்கள்.
தெய்வக்குழந்தை
உத்தரவின் பெயரில் கலாச்சார (????) அமைச்சகம், மற்ற எல்லா அமைச்சகங்களுக்கும் சொல்ல,
அவை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட மேலிடத்து உத்தரவு அமலாகிக் கொண்டிருந்தது. சங்கமாக எங்கள் அதிருப்தியை நிர்வாகத்திடம் பதிவு செய்தோம் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
இந்த
எழவு தினம் இரண்டு வருடங்களாகவே அமலாகிக் கொண்டிருக்கிறது. பிரிவினையின் கொடூரங்களை
இந்துக்கள், முஸ்லீம்கள் என இருவருமே அனுபவித்தார்கள். இரு பக்கங்களிலும் இருந்த கொடியவர்கள்,
வெறியர்களின் தாக்குதல்களுக்கு இரு தரப்பிலும் சேதம் இருந்தது.
அதிலே
இந்துக்கள் பட்ட துயரங்களை மட்டும் செலக்டிவாக காட்சிப்படுத்துவது அயோக்கியத்தனமான
மத வெறி அரசியல். அதிலும் முதல் பேனரில் மோடியின் மூஞ்சிதான் இருக்கிறது.
“இறப்பதற்காக
பிறந்தவை” என்று முதலாளிகள் கூட்டத்தில் பேசிய முரடன் மோடியே, உன் மூஞ்சியை காண்பிக்கவும்,
உன் மத வெறி அரசியலை முன்னெடுக்கவும் மட்டும் நாங்கள் வேண்டுமா?
எதிர்க்கட்சிகள்
நாளை ஆட்சிக்கு வந்ததும் நினைத்து பார்க்க ஏராளமான தினங்கள் இருக்கின்றன. அந்த தருணம்
வந்தால்தான் இந்த அற்ப ஜந்துவிற்கும் அதை ஆதரிக்கும் அரைவேக்காடுகளுக்கும் புத்தி வரும்.
பிகு:
நான் வேறு அந்த மூஞ்சியை காண்பிக்க வேண்டுமா என்ன? அதனால்தான் கருப்பு மை பூசி விட்டேன்.
No comments:
Post a Comment