Thursday, August 15, 2024

மோடி - 110/173

 


மேலே உள்ளது என்னவென்று யோசிக்கிறீர்களா?

நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு தகவல் வெளி வந்திருந்தது.

மக்களவைத் தேர்தலில் மோடி கலந்து கொண்ட 173 பிரச்சாரக் கூட்டங்களில் 110 கூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை, விஷத்தை கக்கியுள்ளார். 

திண்டிவனத்தில் கடந்த சனி, ஞாயிறு எங்கள் கோட்ட மாநாடு நடந்த போது ஒரு தோழர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி "ஒரு பிரதமர் என்ற பதவிக்கான மரியாதையைக் கூட நீங்கள் ஏன் தருவதில்லை" என்று கேட்டார். சற்று விளக்கமாக அவருக்கு பதில் சொன்னேன்.

இந்த புள்ளிவிபரம் முன்பே தெரிந்திருந்தால் ஒரு வாசகத்தில் என் பதில் அமைந்திருக்கும்.

அந்த வாசகம்

ஒரு மதத்தவருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிற ஒரு ஜந்துவை பிரதமராக அல்ல மனிதனாகக் கூட மதிக்க முடியாது. 


No comments:

Post a Comment