Thursday, August 22, 2024

பயம் தொடரட்டும் மோடி . . .

 


மத்தியரசு குடிமைப் பணிகளுக்கு ( CIVIL SERVICES ) நேரடி நியமனத்திற்கு இல்லையில்லை கொல்லைப்புற நியமனத்திற்கு ( LATERAL ENTRY) அளித்திருந்த விளம்பர அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ரத்து செய்து விட்டது.

இட ஒதுக்கீட்டை ஒதுக்கித்தள்ளி தங்களுக்கு தேவையானவர்களை குடிமைப் பணிகளுக்கு கொண்டு வருவதே  இந்த நியமன முறையின் நோக்கம்.

இந்த முறை புதிதல்ல.

இரண்டு மூன்று பணிகள் என்று காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த முறையை மோடி அரசு அதிக எண்ணிக்கைக்கு பயன்படுத்தியது.

காங்கிரஸ் காலத்திலிருந்து இன்று வரை அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மட்டும் எதிர்த்து வருகின்றனர்.

இந்த முறை எதிர்ப்பு பலமாக இருந்தது.

 என்ன காரணம்?

 எண்ணிக்கைதான். எண்ணிக்கைதான்.

 எதற்கு இரண்டு முறை?

 இந்த முறை அவர்கள் நியமனம் செய்ய திட்டமிட்ட எண்ணிக்கை 45.

 எதிர்க்கும் இந்தியா அணியின் எண்ணிக்கை 240.

 போதாக்குறைக்கு ஆளும் கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் வலுக்கத் தொடங்கி விட்டது.

 அதனால்  வேறு வழியில்லாமல் வெற்றிகரமாக கொல்லைப்புற  நியமன விளம்பரம் திரும்பப் பெறப்பட்டு விட்டது.

 இட ஒதுக்கீடு இல்லையென்பதால்தான் மோடி திரும்பப் பெறும் முடிவை எடுத்தாராமே?

 இப்படித்தான் சங்கிகள் பீற்றிக் கொண்டு அலைகிறார்கள். போன வருடமும் கொல்லைப்புற நியமனம் இட ஒதுக்கீடு இல்லாமல்தான் நடந்தது. இது நாள் வரைக்கும் அப்படித்தான். இப்போ உக்ரைன் போன போது அங்கே ஏதாவது போதி மரத்தின் கீழ் அமர்ந்து மோடிக்கு அதிசய ஞானம் கிடைத்ததா என்ன?

 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சமாளிக்கும் கதைதான் இது.

 தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு பயம் வந்து விட்டது. ஐந்து வருடம் நாற்காலி நிலைக்குமா என்ற பயம். 

 அந்த பயம் தொடரட்டும்.  

 அதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

No comments:

Post a Comment