Tuesday, August 20, 2024

சண்டைகள் ஓய்வதில்லை

 


நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி என்று கூட இதை சொல்லலாம். எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களின் இறுதி நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்திரா காந்தியின் இறுதி நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப்படம் என்று கதை கட்டி ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் இஸ்லாமியர்கள் என்று பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் போட்டிருந்த அயோக்கியத்தனத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

நாக்கை பிடுங்கிக் கொண்டு சாவது போல அந்தாளுக்கு ஒரு கமெண்டு போட்டு விட்டு மாலை முகநூல் வந்தால் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு அயோக்கிய சங்கி  அதே படத்தைப் போட்டிருந்தது.

ஏன் இப்படி பொய்யான செய்திகளை அனுமதிக்கிறீர்கள் என்று  குழுவின் மாடரேட்டர் சங்கியை கேட்டால் அந்த செய்தி தவறென்றால் அதற்கான ஆதாரத்தை கொடு என்று தெனாவெட்டாக பதில் சொன்னார்.



 அதே குழுவின் இன்னொரு உறுப்பினர், அது தவறான செய்தி என்பதற்கான லிங்கை கொடுத்து விட்டு, உங்களுடைய எதிர்க்கட்சி தொடர்பான செய்தி என்றால் கண்டபடி உளறினாலும் அனுமதிப்பீர்களா என்று அவர் கேட்டிருந்தார். அது கான் அப்துல் கபார் கானின் சவப்பெட்டி என்று உளற உனக்கு உரிமை உண்டு என்றால் அது இந்திராவின் சவப்பெட்டி என்று சொல்ல அவருக்கும் உரிமை உண்டு என்று இன்னும் திமிராய் எழுதினார்.



 அந்த இன்னொரு உறுப்பினர்தான் ஆதாரம் கொடுத்து விட்டாரே, இனியாவது அந்த தவறான பதிவை நீக்குவீர்களா என்று கேட்டு, நீங்கள் நடுநிலை கிடையாது என்றாலும் அது போன்ற தோற்றத்தை காண்பிக்க நடியுங்களேன் என்றேன்.

 


அப்போதும் அவர் எங்கே ஆதாரம் என்றே கேட்டார்.

 அந்த இன்னொரு உறுப்பினர் காண்பித்த ஆதாரத்தை அவருக்கு tag செய்து இது போதுமா என்று கேட்டேன்.

 அதன் பின்பு சப்தமில்லாமல் அந்த பதிவை அகற்றி விட்டார்கள்.

 நேற்று இரவு மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் அந்த சங்கியின் பக்கத்திற்கு சென்றால் . . .

 இதோ இந்த பதிவு . . .

 


என் சண்டையும் தொடங்கி விட்டது.

 சமரசமில்லாத சண்டை உறுதியோடு தொடரும் . . .

No comments:

Post a Comment