Friday, August 30, 2024

எச்.ராசா, எச்சரிக்கை - யாருக்கு?

 


 ஆட்டுக்காரன் படிப்பதற்காக ( 20,000 புக் படிச்ச ஆட்டுக்காரனுக்கு இனிமே படிக்க என்னய்யா இருக்கு?) லண்டன் அனுப்பப்பட்டுள்ளதால் தமிழ்நாடு பாஜக பணிகளை (அதான் பொய் சொல்றது, கலவரத்தை தூண்டறது, வெறுப்பை விதைப்பது, குற்றவாளிகளை கட்சியில் சேர்ப்பது போன்ற முக்கிய பணிகள் இருக்கே) ஒருங்கிணைக்க ஐகோர்ட்டார் எச்.ராசா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 சாதாரணமாகவே வெறி பிடிச்சு அலையற நச்சு பாம்பு அது. அதுக்கு பதவி வேற கொடுக்கறாங்க.

 தமிழ்நாட்டு மக்கள் மட்டும் ஆட்டுக்காரனும் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்காலிக பதவியை  தக்க வைத்துக் கொள்ள எந்த அளவிற்கும் கீழிறங்கி கிரிமினல்தனம் செய்யும் ஜந்து அது.

 அதனால் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆட்டுக்காரன் உட்பட . . .

அம்பானியை கவனிக்கலையா மோடி?

 


இந்தியாவின் முதன்மை பத்து செல்வந்தர்கள் பட்டியல் கீழே . . .


 

மோடியின் முதன்மை எஜமானன் ஆன கௌதம் அதானி ரூபாய்  11,61,800  கோடிகளோடு  முதலிடத்தில்.  ரூபாய் 10,14,700  கோடிகளூடன்  இரண்டாமிடத்தில்தான் முகேஷ் அம்பானி.

 இருவருக்கும் இடையில் இப்போதுள்ள வித்தியாசம் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய்.

 அதானியின் அபரிதமான வளர்ச்சி நிகழ்ந்தது எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில்தான்.

 அதானி அளவிற்கு மோடி அம்பானியை ஆதரிக்கவில்லை, ஒப்பந்தங்களை என்பதுதான் இந்த புள்ளி விபரம் சொல்லும் உண்மை.

 என்ன மோடி சரிதானே?

Thursday, August 29, 2024

3662 கோடி ரூபாயும் நிர்மலா அம்மையாரும்

 


1956 ல் 5 கோடி ரூபாயும் பின்பு 2011 ல் 95 கோடி ரூபாயும் எல்.ஐ.சி யின் மூலதனமாக  ஒன்றிய அரசு முதலீடு செய்த தொகை. 

அந்த மூலதனத்திற்கு 2023-2024 நிதியாண்டிற்கான லாபத்தில் அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 3662.17 கோடி ரூபாயை எல்.ஐ.சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் அளித்துள்ளார்கள்.

இவ்வளவு ரூபாயை வழங்கும் எல்.ஐ.சி க்கு அந்த அம்மையார் விசுவாசமாக இருப்பார்களா? எல்.ஐ.சி க்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாவது கொடுக்காமல் இருப்பாரா? 

அப்படிப்பட்ட நேர்மையெல்லாம் அந்த அம்மையாருக்கு கிடையாது என்பது சோகமான யதார்த்தம். 

செம நக்கல் செல்லம் . . .

 அமித்ஷாவின் மகன் என்பதைத் தாண்டி வேறெந்த தகுதியும் இல்லாத ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராவது என்பதெல்லாம் கேவலம் அன்றி வேறில்லை. அடுத்தவர்களை வாரிசுகள் என்று வசை பாட இனி மோடிக்கு அருகதை கிடையாது. பணத்தை கொட்டிக் கொடுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கைகளில்தான் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் இருக்கிறது. அது இப்போது அதிகாரபூர்வாகியுள்ளது. அவ்வளவுதான். 

அதை திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் செமயாக நக்கலடித்துள்ளார். 




Wednesday, August 28, 2024

முடியாது மொட்டைச்சாமியாரே . . .

 


மொட்டைச்சாமியார் அறிவித்துள்ள டிஜிட்டல் கொள்கை கீழே . .


பணத்திற்காக எந்த அளவிற்கும் கீழிறங்கத் தயாராக உள்ள ஒரு போலிகள் வேண்டுமானால் பணத்திற்காக எழுத்தை விற்கலாம். குற்றவாளிகளின் புரோக்கர்கள் சிலர் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். 

ஆனால்

என்னைப் போல கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்களை எல்லாம் மொட்டைச்சாமியார் எச்சரித்துள்ள சிறைத் தண்டனை கூட அச்சுறுத்தாது. உண்மைகளை தொடர்ந்து எழுதுவோம். 

கொல்கத்தாவிற்கு அப்பாலும் பாருங்கள் ஜனாதிபதி மேடம்

 


கொல்கத்தா சம்பவம் கொடூரமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதற்கு நீங்கள் வேதனை தெரிவித்துள்ளதும் நல்லது. 

ஆனால் உங்கள் பார்வை கொல்கத்தாவோடு சுருங்கிப் போவது எங்களுக்கு வேதனை தருகிறது.

கொல்கத்தாவைத் தாண்டி மணிப்பூர் என்றொரு மாநிலம். அங்கே மிகப் பெரிய அயோக்கியத்தனத்தை உங்களை ஜனாதிபதியாக்கியவர்கள் செய்தார். பெண்களுக்கு அங்கே இழைக்கப்பட்ட கொடூரம், கொல்கத்தா கொடூரத்திற்கு நிகரானதுதான்.

அந்த பிரச்சினை தொடர்பாகவும் கண்டனம் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். 

இந்தியாவின் முதல் குடிமகளான உங்களிடம் கேட்காமல் வேறு யாரை கேட்பது? 

Tuesday, August 27, 2024

கன்னத்தில் அறை வாங்கியும் கங்கணா


பாஜகவின் ஆணவ எம்.பிக்களில் ஒருவரான நடிகை கங்கணா ரணாவத்,

விஷம் கக்கும் பொய்ப் பிரச்சாரம் செய்வதில் மோடிக்கு நிகரானவர்.

விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி அவர் சமீபத்தில் உளறிய  பேச்சுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக கை விரித்து  விட்டது. அப்படியெல்லாம் பேச அவருக்கு அனுமதி கிடையாது (மோடி மட்டும்தான்   பேசலாம் போல) என்று வேறு சொல்லி விட்டார்கள்.

கட்சியால் கைவிடப்பட்ட கங்கணா இனியாவது திருந்துவாரா?

வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைப் பற்றி  கொச்சையாக பேசியதால்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பு அலுவலரிடம்    கன்னத்தில் அறை வாங்கினார்.

அறை வாங்கிய அனுபவம் இருந்தும்  அவர் வாயை கட்டுப்படுத்தவில்லை.

நாயின் வால் நிமிராது.

சிவாஜியுமா மோடி???

 


மோடியின் லேட்டஸ்ட் சாதனை கீழே உள்ளது . . .


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மஹராஷ்டிர மாநிலத்தின் சிந்துர்கில் சென்ற ஆண்டு டிமோ திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்து நொறுங்கி விட்டது. சிலைத் திறப்பைக் கொண்டாடிய ஊடகங்கள் சிவாஜி செத்துட்டாரான்னு மெட்டுலா ஓப்லங்கட்டாவில் அடிபட்ட விஜய் சேதுபதி மாதிரி முழித்துக் கொண்டிருக்கின்றன!

விஜய சேதுபதிக்கு குணமானது போல நம் மோடிமீடியாக்கள் குணமடைய வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தம்



Monday, August 26, 2024

பாவமய்யா முருகன் !!!

 


சீமான் முப்பாட்டன் முருகன் என்று சுவரொட்டிகள் அடித்து காமெடி செய்தார்.

பாஜக சங்கிகள் வேல் யாத்திரை என்ற பெயரில் கவர்ச்சி நடனங்களுடன் முருகனை அசிங்கப்படுத்தினார்கள்.

இப்போது தமிழ்நாட்டு அரசின் முறை.


முத்தமிழ் முருகன் உலக மாநாடு என்ற பெயரில் இரண்டு நாட்கள் நிகழ்வொன்றை பழனியில் நடத்தியுள்ளனர்.

இவை எல்லாமே தேவையற்றது.

அரசியல் ஆதாயத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் கிடையாது. 

முருகரை விட்டு விடுங்களேன், 

ராமரே மோடியை கைவிட்ட கதையை பார்த்துமா இந்த முயற்சி?

பிகு: இந்த மாநாட்டினால் சங்கிகள் சிலர் வயிறெரிந்தார்கள் என்றால் பலர் அதனை தங்கள் சாதனை போல பீற்றிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ள இடம் கொடுக்க வேண்டுமா? முதல்வர் கலைஞர் போல அமைச்சர்களிடம் கறாராக இருக்க வேண்டும். 

Sunday, August 25, 2024

UPS - உழைப்பாளிகளின் வெற்றி

 


புதிய அல்லது தேசிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிணைந்த பென்ஷன் திட்டத்தை (UNIFIED PENSION SECHEME)  ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அறிவித்து உள்ளது.

பழைய பென்ஷன் திட்டத்திற்கும் புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இருந்த மிகப் பெரிய அநீதி நீக்கப்பட்டதுதான் யுபிஎஸ்.

பழைய பென்ஷன் திட்டத்தில் பலன் வரையறுக்கப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டத்தில் பங்களிப்பு வரையறுக்கப்பட்டதே தவிர பலன் என்ன வரும் என்பது தெரியாது.

இப்போது புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தில் 25 ஆண்டுகள் பணிக்காலம் உடைய ஊழியர் ஓய்வு பெறும் வேளையில் பெறும் அடிப்படை ஊதியத்தில் 50 % பென்ஷனாக வழங்கப்படும். 

ஓய்வூதியர் இறந்தால் அவர் பெறும் பென்ஷனில் 60 % குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்காக அரசின் பங்களிப்பு தற்போதுள்ள 14 % என்பதிலிருந்து 18 % ஆக உயர்த்தப்படும்.

2004 முதல் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வந்ததன் வெற்றி இது. இந்திய மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவை மைனாரிட்டியாக மாற்றியதன் விளைவு இது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களவைத் தேர்தலில் கவனம் பெற்றதன் காரணமாக நிகழ்ந்த மாற்றம் இது.

ஒன்றிணைந்த பென்ஷன் திட்டம் என்ற பெயர் மாற்றம் செய்து   பழைய பென்ஷன் திட்டத்தின் அடிப்படை பலனை அளிப்பதற்குப் பதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு  பழைய பென்ஷன் திட்டத்தையே விரிவு படுத்தியிருக்கலாம். ஆனாலும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதுவும் நடக்ககும், கண்டிப்பாக . . .


Friday, August 23, 2024

ஆட்டுக்காரனுக்கு ஜமுக்காளம். எல்.முருகனுக்கோ ????

 


விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக ஆட்டுக்காரன் புளகாங்கிதத்துடன்  பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 அந்த புகைப்படங்களை பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. ஆட்டுக்காரனுக்கு சரியாசனம் தரப்படவில்லை என்பதை விட மடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ ஆட்டுக்காரனுக்கு தரிசனம் தரப்படவில்லை. கொல்லைப்புறத்தில் வைத்துத்தான் ஆட்டுக்காரனுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் அளவிற்குமான தகுதிகளோ, அருகதையோ  ஆட்டுக்காரனுக்கு இல்லை போல . . .

 


ஆட்டுக்காரனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை போலவேதான் எல்.முருகனும் கொல்லைப்புறத்தில் உட்கார வைக்கப்பட்டார். அந்த புகைப்படத்தை தேடி  எடுத்து பார்த்தேன்.

 அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்.

 ஆட்டுக்காரன்,எல்.முருகன் இருவரும் வீட்டிற்குள்  அனுமதிக்கப்படவில்லை. இருவரும் கொல்லைப்புறத்தில்   அமர வைக்கப்பட்டாலும்  ஆட்டுக்காரன் உட்கார ஒரு ஜமுக்காளம் போடப்ப்ட்டுள்ளது. ஆனால் பாவம் எல்.முருகனோ தரையில்தான் உட்கார்ந்துள்ளார்.



 ஒரு ஜமுக்காளத்தில்  உட்காரும் அளவிற்குக்கூட எல்.முருகனுக்கு தகுதி கிடையாதா?

 இது தீண்டாமையன்றி வேறில்லை . . .

 

Thursday, August 22, 2024

பயம் தொடரட்டும் மோடி . . .

 


மத்தியரசு குடிமைப் பணிகளுக்கு ( CIVIL SERVICES ) நேரடி நியமனத்திற்கு இல்லையில்லை கொல்லைப்புற நியமனத்திற்கு ( LATERAL ENTRY) அளித்திருந்த விளம்பர அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ரத்து செய்து விட்டது.

இட ஒதுக்கீட்டை ஒதுக்கித்தள்ளி தங்களுக்கு தேவையானவர்களை குடிமைப் பணிகளுக்கு கொண்டு வருவதே  இந்த நியமன முறையின் நோக்கம்.

இந்த முறை புதிதல்ல.

இரண்டு மூன்று பணிகள் என்று காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த முறையை மோடி அரசு அதிக எண்ணிக்கைக்கு பயன்படுத்தியது.

காங்கிரஸ் காலத்திலிருந்து இன்று வரை அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மட்டும் எதிர்த்து வருகின்றனர்.

இந்த முறை எதிர்ப்பு பலமாக இருந்தது.

 என்ன காரணம்?

 எண்ணிக்கைதான். எண்ணிக்கைதான்.

 எதற்கு இரண்டு முறை?

 இந்த முறை அவர்கள் நியமனம் செய்ய திட்டமிட்ட எண்ணிக்கை 45.

 எதிர்க்கும் இந்தியா அணியின் எண்ணிக்கை 240.

 போதாக்குறைக்கு ஆளும் கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் வலுக்கத் தொடங்கி விட்டது.

 அதனால்  வேறு வழியில்லாமல் வெற்றிகரமாக கொல்லைப்புற  நியமன விளம்பரம் திரும்பப் பெறப்பட்டு விட்டது.

 இட ஒதுக்கீடு இல்லையென்பதால்தான் மோடி திரும்பப் பெறும் முடிவை எடுத்தாராமே?

 இப்படித்தான் சங்கிகள் பீற்றிக் கொண்டு அலைகிறார்கள். போன வருடமும் கொல்லைப்புற நியமனம் இட ஒதுக்கீடு இல்லாமல்தான் நடந்தது. இது நாள் வரைக்கும் அப்படித்தான். இப்போ உக்ரைன் போன போது அங்கே ஏதாவது போதி மரத்தின் கீழ் அமர்ந்து மோடிக்கு அதிசய ஞானம் கிடைத்ததா என்ன?

 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சமாளிக்கும் கதைதான் இது.

 தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு பயம் வந்து விட்டது. ஐந்து வருடம் நாற்காலி நிலைக்குமா என்ற பயம். 

 அந்த பயம் தொடரட்டும்.  

 அதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

Tuesday, August 20, 2024

ரொம்பவுமே பயந்துட்டீங்களா மோடி?

 


கீழேயுள்ள பதிவை பாருங்கள்.

வினேஷ் போகத்தை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்க, அவர் இந்தியா வருவதற்கு முதல் நாளே ஒலிம்பிக் சென்ற வீரர்களை சந்திக்கும் நிகழ்வை நடத்தி விட்டார் என்று சொல்கிறது அந்த பதிவு,

நூறு சதவிகிதம் உண்மைதான்.

ஏனென்றால் மோடி 56 இஞ்ச் கோழை, வடி கட்டிய கோழை.... வாய் மட்டும்தான் காது வரை . .  

சண்டைகள் ஓய்வதில்லை

 


நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி என்று கூட இதை சொல்லலாம். எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களின் இறுதி நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்திரா காந்தியின் இறுதி நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப்படம் என்று கதை கட்டி ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் இஸ்லாமியர்கள் என்று பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் போட்டிருந்த அயோக்கியத்தனத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

நாக்கை பிடுங்கிக் கொண்டு சாவது போல அந்தாளுக்கு ஒரு கமெண்டு போட்டு விட்டு மாலை முகநூல் வந்தால் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு அயோக்கிய சங்கி  அதே படத்தைப் போட்டிருந்தது.

ஏன் இப்படி பொய்யான செய்திகளை அனுமதிக்கிறீர்கள் என்று  குழுவின் மாடரேட்டர் சங்கியை கேட்டால் அந்த செய்தி தவறென்றால் அதற்கான ஆதாரத்தை கொடு என்று தெனாவெட்டாக பதில் சொன்னார்.



 அதே குழுவின் இன்னொரு உறுப்பினர், அது தவறான செய்தி என்பதற்கான லிங்கை கொடுத்து விட்டு, உங்களுடைய எதிர்க்கட்சி தொடர்பான செய்தி என்றால் கண்டபடி உளறினாலும் அனுமதிப்பீர்களா என்று அவர் கேட்டிருந்தார். அது கான் அப்துல் கபார் கானின் சவப்பெட்டி என்று உளற உனக்கு உரிமை உண்டு என்றால் அது இந்திராவின் சவப்பெட்டி என்று சொல்ல அவருக்கும் உரிமை உண்டு என்று இன்னும் திமிராய் எழுதினார்.



 அந்த இன்னொரு உறுப்பினர்தான் ஆதாரம் கொடுத்து விட்டாரே, இனியாவது அந்த தவறான பதிவை நீக்குவீர்களா என்று கேட்டு, நீங்கள் நடுநிலை கிடையாது என்றாலும் அது போன்ற தோற்றத்தை காண்பிக்க நடியுங்களேன் என்றேன்.

 


அப்போதும் அவர் எங்கே ஆதாரம் என்றே கேட்டார்.

 அந்த இன்னொரு உறுப்பினர் காண்பித்த ஆதாரத்தை அவருக்கு tag செய்து இது போதுமா என்று கேட்டேன்.

 அதன் பின்பு சப்தமில்லாமல் அந்த பதிவை அகற்றி விட்டார்கள்.

 நேற்று இரவு மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் அந்த சங்கியின் பக்கத்திற்கு சென்றால் . . .

 இதோ இந்த பதிவு . . .

 


என் சண்டையும் தொடங்கி விட்டது.

 சமரசமில்லாத சண்டை உறுதியோடு தொடரும் . . .

Monday, August 19, 2024

சங்கிகளின் மோசடிகள் ஓயாது.

 


இன்றைய ஸ்பெஷல் கவனிப்பு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு.

அந்தாள் போட்ட ட்விட்டர் பதிவு கீழே . . .


இந்த புகைப்படம் இதே வாசகத்துடன் சில வருடங்கள் முன்பாக வெளி வந்தது. எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களின் இறுதிச் சடங்கு என்பதை சங்கிகள் மோசடியாக சித்தரிக்கிறார்கள் என்பது அப்போதே அம்பலமாகி சங்கிகள் அசிங்கப்பட்டார்கள்.

அதே பழைய பொய்யை இந்த நாலு கால் ஜந்து பகிர்ந்து கொள்கிறது. 

இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலும் எரியூட்டலும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. எல்லா திரையரங்குகளிலும்  காண்பிக்கப்பட்டது.

அதையே மாற்றுகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது!

பிகு: பதிவு இன்னும் ஓயவில்லை.

Sunday, August 18, 2024

கொல்கத்தா கொடுமை- மம்தாவே பொறுப்பு

 


கொல்கத்தாவில் நடந்த கொடூரம் நம்மை பதற வைக்கிறது. நிர்பயாவை எப்படி சித்திரவதை செய்தார்களோ, அதை விட மோசமான சித்திரவதைக்கு அந்த இளம் மருத்துவர் உள்ளாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஒரு ரௌடிக் கலாச்சாரத்தை உருவாக்கி வைத்துள்ள மம்தாவே இச்சம்பவத்திற்கு முழு முதல் பொறுப்பு.  ஒரே ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைத் தவிர இன்னும் ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என்பது இறந்த பெண்ணின் சடலம் சொல்லும் செய்தி.

ஆனால் மற்றவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அந்த மருத்துவ மனை போராட்ட களமானது. 

போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது நூற்றுக்கணக்கான ரௌடிகள் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்ததும் அவர்கள் வந்ததும் போலீஸ் ஒளிந்து கொண்டதும், மிகப் பெரிய குற்றத்தின் பின்னணியில் இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் என்பது தெளிவாகிறது.

ஆர்ப்பாட்டம்  நடத்துவதை விட்டு விட்டு தன் கட்சியில் உள்ள ரௌடிகள், பொறுக்கிகள், திருடர்களை வெளியேற்றட்டும்.

ஆனால் அதை மம்தா செய்ய மாட்டார்.

ஏன்?

அவர் கட்சியே காணாமல் போய் விடும்.

Saturday, August 17, 2024

அன்பான எதிரிகளுக்கு . . .

 


கடந்த சில மாதங்களாக சில நல்லவர்கள் என் மீது சில அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நல்லவர்கள் யாரென்பதும் அந்த நல்லவர்களை தூண்டி விடும் மிக நல்லவர்கள் யார் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நான் இருந்த இடத்திற்கு வருவதற்கு  வெறியோடு இருந்தவர்கள், தங்களின் முறைகேடுகளுக்கு தடையாக இருப்பதாக நினைத்தவர்கள், என்று பட்டியலே உள்ளது. அவர்கள் இங்கேயும் பல சமயம் அனாமதமேயமாக வந்து அம்பலப்படுவார்கள்.

இப்போது ஒரு புதிய முயற்சி நடந்துள்ளதாக சில தோழர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். உங்களின் பணி ஓய்வு நிம்மதியாக இருக்கக்கூடாது என்பதுதான் அந்த கும்பலின் நோக்கம் என்று சொன்னார் ஒரு தோழர்.

அந்த அன்பான எதிரிகளுக்கு ஒரு தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலே உள்ள படம் 19.07.1989 அன்று எடுக்கப்பட்டது.  நெய்வேலி கிளையில் ஒரு பிரச்சினைக்காக சங்கமாக தலையிட்டதற்காக அடியாட்கள் மூலம் கிடைத்த பரிசு.  உதட்டில் ஐந்து தையலும் பாதி உடைந்த பல்லும். அப்போது என் வயது 23.  இனி சங்கமெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மூளைச்சலவை செய்ய நடந்த முயற்சிகளுக்கெல்லாம் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், விடுமுறைக்குப் பின் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்வே வேலூரில் எங்கள் சங்கத்தின் இரண்டாவது பொது மாநாடுதான்.

ரௌடிகளை வைத்து மிரட்டியதற்கு அந்த சின்ன வயதிலேயே பயப்படவில்லை, இப்போது அவதூறுகளுக்கா பயப்படுவேன், அதுவும் இத்தனை வருட அனுபவத்திற்குப் பிறகு! 

அன்றைக்கு 1989 ல் அந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்கள் நிலைமை எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒருவர் இன்னொருவரின் சொத்தை அபகரிக்கும் பஞ்சாயத்தில் கொல்லப்பட்டார். இன்னொருவர் ஊழல் வழக்கில் இரண்டு வருடம் ஜெயிலில் இருந்தார். மூன்றாமவர் மஞ்சள் கடிதாசு கொடுத்து விட்டார்.

இப்போதைய  அன்பான எதிரிகளும் மேலே உள்ளவர்களைப் போன்ற நல்லவர்கள்தான். அதனால் அவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

"Let the dogs bark, the caravan moves on"

என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போலத்தான் என் பயணத்தை எந்த அவதூறுகளாலும் தடுத்து விட முடியாது.

தொடந்து தோற்றுக் கொண்டிருக்கும் என் அன்பான எதிரிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்😆😆😆😆😆😆

Thursday, August 15, 2024

மோடி - 110/173

 


மேலே உள்ளது என்னவென்று யோசிக்கிறீர்களா?

நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு தகவல் வெளி வந்திருந்தது.

மக்களவைத் தேர்தலில் மோடி கலந்து கொண்ட 173 பிரச்சாரக் கூட்டங்களில் 110 கூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை, விஷத்தை கக்கியுள்ளார். 

திண்டிவனத்தில் கடந்த சனி, ஞாயிறு எங்கள் கோட்ட மாநாடு நடந்த போது ஒரு தோழர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி "ஒரு பிரதமர் என்ற பதவிக்கான மரியாதையைக் கூட நீங்கள் ஏன் தருவதில்லை" என்று கேட்டார். சற்று விளக்கமாக அவருக்கு பதில் சொன்னேன்.

இந்த புள்ளிவிபரம் முன்பே தெரிந்திருந்தால் ஒரு வாசகத்தில் என் பதில் அமைந்திருக்கும்.

அந்த வாசகம்

ஒரு மதத்தவருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிற ஒரு ஜந்துவை பிரதமராக அல்ல மனிதனாகக் கூட மதிக்க முடியாது. 


கொடியேத்தியாச்சு மோடி, ஆளை விடுய்யா

 


இரண்டு நாட்கள் முன்பு தொடங்கிய சித்திரவதை இன்னும் முடியவில்லை. 

ஒவ்வொரு முறை தொலைபேசி செய்யும் போது கர்புர் என்று மோடி கத்துவதை கேட்கும் சித்திரவதையைத்தான் சொல்கிறேன்.

சுதந்திர தினம் முடியவே போகிறது. ஆனால் சித்திரவதை இன்னும் ஓயவில்லை. 

அய்யா மோடி முடியலை. ஒவ்வொரு முறையும் அடுத்தவர் அலைபேசியில் வந்து பேசுவது அநாகரீகமான செயல். இனியாவது அதை நிறுத்தவும்.

ஆமாம் இந்த அவஸ்தை பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தானே, முதலாளி அம்பானியின் ஜியோவில் கிடையாது அல்லவா? அவனிடம் சொன்னால் காலில் உள்ளது கைக்கு வந்து விடுமல்லவா!


விடுதலை வருமென்று கொண்டாடுவோம் . . .

 


வெள்ளையனிடமிருந்து பெற்ற விடுதலை
இன்று ஒரு கொள்ளையனிடம் சிக்கியுள்ளது.

மதம் மறந்த போராட்டம் அது.
அதை மறந்து மதத்தை வைத்து 
ஆட்சி செய்யும் கூட்டம் இது.

ஏழை எளியவர்களின் பங்களிப்பு
அன்று விடுதலையை கொடுத்தது.
முதலாளிகளுக்கு சாமரம் வீசும்
கருவியானது இன்றைய அரசு.

மாற்றம் ஒன்றே மாறாதது.
ஜூனில் கொஞ்சமாய் கிடைத்த விடுதலை
நிச்சயம் நாளை முழுமையாய் கிடைக்கும்.
நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

சுதந்திர தின வாழ்த்துக்கள். 

Wednesday, August 14, 2024

உன் மூஞ்சிக்கும் வெறியேற்றவும் நாங்களா மோடி?

 


இன்று காலை அலுவலகத்திற்குள் நுழையும் போதே கோபம் தலைக்கேறியது.

 “PARTITION HORRORS REMEMBERENCE DAY” என்ற எழவு பெயரில் சில பேனர்களை கண்காட்சியாக அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

 தெய்வக்குழந்தை உத்தரவின் பெயரில் கலாச்சார (????) அமைச்சகம், மற்ற எல்லா அமைச்சகங்களுக்கும் சொல்ல, அவை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட மேலிடத்து உத்தரவு அமலாகிக் கொண்டிருந்தது. சங்கமாக எங்கள் அதிருப்தியை நிர்வாகத்திடம் பதிவு செய்தோம் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

 இந்த எழவு தினம் இரண்டு வருடங்களாகவே அமலாகிக் கொண்டிருக்கிறது. பிரிவினையின் கொடூரங்களை இந்துக்கள், முஸ்லீம்கள் என இருவருமே அனுபவித்தார்கள். இரு பக்கங்களிலும் இருந்த கொடியவர்கள், வெறியர்களின் தாக்குதல்களுக்கு இரு தரப்பிலும் சேதம் இருந்தது.

 அதிலே இந்துக்கள் பட்ட துயரங்களை மட்டும் செலக்டிவாக காட்சிப்படுத்துவது அயோக்கியத்தனமான மத வெறி அரசியல். அதிலும் முதல் பேனரில் மோடியின் மூஞ்சிதான் இருக்கிறது.

 “இறப்பதற்காக பிறந்தவை” என்று முதலாளிகள் கூட்டத்தில் பேசிய முரடன் மோடியே, உன் மூஞ்சியை காண்பிக்கவும், உன் மத வெறி அரசியலை முன்னெடுக்கவும் மட்டும் நாங்கள் வேண்டுமா?

 எதிர்க்கட்சிகள் நாளை ஆட்சிக்கு வந்ததும் நினைத்து பார்க்க ஏராளமான தினங்கள் இருக்கின்றன. அந்த தருணம் வந்தால்தான் இந்த அற்ப ஜந்துவிற்கும் அதை ஆதரிக்கும் அரைவேக்காடுகளுக்கும் புத்தி வரும்.

 பிகு: நான் வேறு அந்த மூஞ்சியை காண்பிக்க வேண்டுமா என்ன? அதனால்தான் கருப்பு மை பூசி விட்டேன்.

 

வெயிகல்கவர்?????

 


நாளிதழுடன் வந்த விளம்பர நோட்டீஸில் அச்சிடப்பட்டிருந்த "வெயிகல்கவர்" என்ற வார்த்தையை மட்டும் முதலில் படித்து விட்டு ஒரு கணம் குழம்பிப் போனேன்.

படத்தைப் பார்த்ததும்தான் புரிந்தது. அது "VEHICLE  COVER"

அய்யா விளம்பரதாரர்களே, அச்சகத்தாரே, தமிழை கொஞ்சம் விட்டு விடுங்களேன். தமிழ் வாழ வேண்டும். 

Tuesday, August 13, 2024

கழுதைப்புலியும் கடிக்கும் ஆட்டுக்காரா!

 


செபி தலைவராக உள்ள அம்மையாரின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று ஆட்டுக்காரன் சொன்ன காணொளியை பார்த்தேன். "அதானி புலி வருது, அம்பானி புலி வருதுன்னு சொன்னாங்க, ஒரு கழுதைப்புலி கூட வரலை" என்பது ஆட்டுக்காரன் கூற்று.

தம்பி ஆட்டுக்காரா, கழுதைப்புலியை அவ்வளவு சாதாரணமா நினைக்காதே! அது கடிச்சாலும் கதை ஓவர்தான் . . .

ரொம்ப நாள் உங்க தெய்வக்குழந்தையோட முதலாளி தப்பிக்க முடியாது. இந்த முறை இப்படித்தான் ஆகும்.....

எப்படி?????




Monday, August 12, 2024

என்ன "தி இந்து" நக்கலா?

 


இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் மேலே உள்ள செய்தி " அமன் செஹாவரத்" இந்தியாவின் நாற்பத்தி ஒன்றாவது பதக்கத்தை வென்றார்" என்று தொடங்குகிறது.

கிடைக்க வேண்டிய தங்கப் பதக்கத்தைக் கூட கேடு கெட்ட தெய்வக் குழந்தை வகையறாக்கள் சதி செய்து கெடுத்து விட்டார்களே, எப்படி ஒரே இரவில் இத்தனை பதக்கங்கள் வந்தது என்று ஆச்சர்யத்துடன் மேலே படித்தால்தான் தெரிகிறது. 1900 ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடங்கி 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரை இந்தியா இதுவரை 41 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது என்ற அவலத்தை சொல்லும் செய்தி அது என்று.

இப்படி ஒரு நக்கல் தேவையா "தி இந்து"விற்கு?

பிகு: மத வெறியை தூண்டும் விஷப் பேச்சுக்களுக்கு வயது வாரியா போட்டிகள் வையுங்கய்யா, அவதாரமும் அவதாரத்தின் அத்தனை அல்லக்கைகளும் அனைத்து பதக்கங்களையும் அள்ளி வருவார்கள் பாருங்கய்யா . . .


Friday, August 9, 2024

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக . . .

வினீஷ் போகத்தின் பதக்கத்தை பறித்த சதி குறித்து நேற்று இதயங்களை வென்றாய் பெண்ணே  என்ற பதிவை எழுதி அதனை முகநூலிலும் பகிர்ந்து கொண்டேன்.

முகநூலின் சமூகத் தரத்திற்கு எதிராக இருப்பதாக என்று சொல்லி ஒரு பத்து நிமிடத்திற்குள் நீக்கி விட்டார்கள்.

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான் முகநூலின் சமூகத்தரம் போல . . .

240 சீட்டிற்கே இப்படியென்றால் மோடி சொன்னது போல சாக்கோபார் கிடைத்திருந்தால் ஆட்டம் எப்படி இருக்கும்!
 

Wednesday, August 7, 2024

இதயங்களை வென்றாய் பெண்ணே!

 


தகுதி இழப்பு என்பது ஒரு மோசடி. நாட்டின் பெருமையை விட காமுகனின் போலி கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கிற கீழ்த்தரமான மனிதன் பிரதமராக உள்ள தேசத்தில் இதுவும் நடக்கும். இதை விட கேவலமாகவும் நடக்கும்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பு வந்த போது வாய் மூடிக் கிடந்த சங்கி நாய்கள் இப்போது ஊளையிடுவது ஒன்றே போதும் நடந்தது சதி என்பதற்கு.

பதக்கத்தை நீ இழந்திருக்கலாம். ஆனால் இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்கள் இதயங்களை வென்றுள்ளாய். எங்களுக்கு நீ தங்க மங்கைதான்.

கட்டபொம்மன் நினைவிலிருக்கும் நாள் வரை எட்டப்பனின் நினைவு இருக்கும், துரோகி என்று.

அது போலத்தான் உனது வலியும் நினைவில் இருக்கும், உனக்கு வேதனை கொடுத்தவர்களும் நினைவில் இருப்பார்கள், துரோகிகளாக, கயவர்களாக . . .

அருகதையற்ற மோடி, வாழ்த்தாதே

 


இந்திய மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் தங்கம் வெல்ல உண்மையான  இந்தியர்கள்  அனைவரும் வாழ்த்துவோம். தங்கமோ, வெள்ளியோ இந்தியாவுக்கு அவரால் ஒரு பதக்கம் உறுதி.

காமக் கொடூரன் மல்யுத்த வாரியத் தலைவன் பிரிஜ்பூஷன் சரன்சிங்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றவர்களோடு இணைந்து போராடிய போது அப்போராட்டத்தை நசுக்கி அயோக்கியனுக்கு துணை நின்று அவன் மகனுக்கு சீட் கொடுத்து எம்.பி ஆக்கிய கேடு கெட்ட நரேந்திர மோடியே, வினீஷ் போகத் பதக்கம் வென்றதும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து எல்லாம் சொல்லாதே. அதற்கான அருகதை உனக்கு கிடையாது.

மோடி மட்டுமல்ல, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஆதரிக்காத எந்த காவிக்கயவ்னுக்கும் அருகதை கிடையாது.

Saturday, August 3, 2024

எரிச்சலூட்டும் காமெடி வேண்டாம் மோடி

 


எதிர்க்கட்சி மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கவே ஆரெஸெஸ் ரெவி எனும் ஜந்துவை தமிழ்நாட்டுக்கும் ஆரிப் முகமது கான் என்ற இன்னொரு ஜந்துவை கேரளாவுக்கும் அனுப்பி விட்டு மோடி பேசும் பேச்சை பாருங்கள்.


ஆட்டுத்தாடிகள் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் நடுவே பாலமாக இருக்க வேண்டுமாம்.

எரிச்சலூட்டும் காமெடி வேண்டாம் மோடி

Friday, August 2, 2024

பேரழிவை விட பெருந்துயரம்

 


வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவை விட பெருந்துயரத்தை அளிப்பதாக இந்த அழிவை வைத்து நடக்கும் அசிங்க அரசியல்...

நாங்கள் கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு மதிக்கவில்லை என்ற பொய்ப் பிரச்சாரத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். அது பொய் என்று தோழர் பினராயி விஜயன் தக்க பதிலடியை ஆதாரங்களுடன் கொடுத்த பின்பே அவர் அடங்கினார்.

நேரடி சங்கிகளும் நாம் தமிழர் வேடமிட்ட சங்கிகளும் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பனின் சாபம்,
ராகுல் காந்தியை ஜெயிக்க வைத்த பாவம்,
தண்ணீர் தராத கேரளா இப்படித்தான் அழிந்து போகும்,
மலப்புரம் மாவட்டத்தில் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரே ஒரு மாதிரியை மட்டும் பாருங்கள்


இந்த பேரழிவு சக்திகளை என்ன செய்வது?
இயற்கைதான் மனது வைக்க வேண்டும்.

Thursday, August 1, 2024

30 லட்சம் - அளித்தோருக்கு நன்றி

 


நேற்று இரவு கணிணியை அணைப்பதற்கு முன்பாகத்தான் கவனித்தேன். 


ஆமாம்,

வலைப்பக்கத்தின் பார்வைகள் 9HITS) முப்பது லட்சம் என்ற மைல்கல்லைக் கடந்திருந்தது.

2009 ல் வலைப்பக்கம் தொடங்கியிருந்தாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்தது. 

இங்கே உள்ள சுதந்திரமே தொடர்ந்து எழுத வைக்கிறது. பார்வையாளர்களின் வருகை உற்சாகமூட்டுகிறது. அனாமதேயமாக எழுதும் சிலர் யாரென்று தெரிந்தவர்கள்தான். நேரடியாக மோத முடியாத கோழைகள் அவர்கள் என்பதால் இப்போதெல்லாம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்து வலைப்பக்கத்திற்கு வந்து உற்சாகப்படுத்தி முப்பது லட்சம் பார்வைகள் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி . . .