Saturday, April 30, 2022

தரமான கமெண்ட்

 விளக்கம் தேவையில்லை. ரசித்து சிரிக்கவும்


இந்த பின்னூட்டத்தினை எழுதியவர் இயக்குனர் மகேந்திரனின் மகனும்  விஜய் நடித்த சச்சின் படத்தின் இயக்குனருமான ஜான் மகேந்திரன். 

இந்தி கட்டாயமென்றால் இந்தியா?????

 


மொட்டைச் சாமியாரின் மந்திரி ஒருவன் பேசியதை கவனியுங்கள்.




சங்கிகளோ ஏன் நீதிமன்றங்கள் கூட இந்த வெறிப்பேச்சை கண்டிக்க மாட்டார்கள்.

ஆனால் இதற்கு  யாராவது

"இந்தி தெரிந்து கொள்வது கட்டாயமென்றால் இந்தியாவே எங்களுக்கு தேவையில்லை"

"நாங்கள் தனி நபராக ஏனய்யா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், தனி நாடாகவே வெளியேறுகிறோம்"

"இந்தி தெரியாதவனை கண்டா வெறுப்பா இருக்கு, அவன் கொடுக்கிற வரி மட்டும் இனிக்குதா?"

என்றெல்லாம் எதிர்வினை ஆற்றினால் அப்போது மட்டும் பிரிவினை பேசுவதாக எல்லோரும் ஓடி வருவார்கள்.

முதல்ல அவனை பிடிச்சு உள்ளே போடுங்க சார்.

Friday, April 29, 2022

காஷ்மீர் - எல்லாம் பொய்யா மோடி?

 

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக மோடி சில நாட்கள் முன்பு காஷ்மீர் போன போது அறிவித்தார். சங்கிகளும் அப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மேலே உள்ளது ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஜூம்மா மசூதி. 

அங்கே ரம்ஜானுக்கு தொழுகை நடத்த காஷ்மீர் யு.டி யின் துணை நிலை ஆட்டுத்தாடி மறுத்து விட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாதாம்.

அப்போ இயல்பு நிலை திரும்பியதாக மோடி சொன்னது வழக்கம் போல பொய்தானா?

பிகு 1 : காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக சொல்வது அப்பட்டமான பொய்தான். திறந்தவெளிச் சிறையில் இருப்பதாகத்தான் அம்மக்கள் கருதுகிறார்கள்.

பிகு 2: ஜூம்மா மசூதி தொழுகை மறுப்பின் காரணமாக இந்திய அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் அதிகரித்துள்ளது. இது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கும்.

ஒரு டவுட்டு:

அதெப்படி மோடி காஷ்மீருக்கு போன முதல் நாளும் போய் விட்டு வந்த இரண்டாம் நாளும் 44 வீரர்களை மோடி வகையறாக்கள் திட்டமிட்டு பலி கொடுத்த புல்வாமாவிலேயே எண்கவுண்டர் நடந்து தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள்?


5 G அவரும் சொல்லவில்லை, இவர்களும் . . .

 


"இன்னும் மூன்று நான்கு மாதத்தில் 5 ஜி சேவை அறிமுகமாகும். கட்டணம் தொடர்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு ஒரு உடன்பாடு விரைவில் வரும். முன்பு சொன்ன கட்டணத்திலிருந்து 30 லிருந்து 40 % வரை குறைத்துள்ளோம்"

இது தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்பவர் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது.

5 ஜி க்காக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு பேசிக் கொண்டிருப்பதாக சொன்ன மந்திரியும்

4 ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நடத்த எப்போது அனுமதி தரப் போகிறோம் என்று சொல்லவில்லை.

அப்படி ஏதாவது திட்டம் உண்டா என்று பத்திரிக்கையாளர்களும் கேட்கவில்லை. 

பிகு: முன்பு முன்மொழிந்த கட்டணத்திலிருந்து 90 % குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கடும் அதிருப்தியாம் . . . 


Thursday, April 28, 2022

எப்படி இருந்த ட்ரெய்ன்?

 


“இந்திய ரயில்வேயின் வரலாற்றில் அன்றைய தினம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். திருப்பாதிரிபுலியூர் பாசஞ்சர் அன்று சரியான நேரத்தில் பெங்களூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தது”

குங்குமத்தில் வெளி வந்த “வசந்தகால குற்றங்கள்” என்ற சுஜாதாவின் தொடர்கதை மேற்கண்ட வரிகளோடுதான் தொடங்கும்.

திருப்பாதிரிபுலீயூர் பாசஞ்சரை விட பிரசித்தி பெற்ற ஒரு தொடர்வண்டி “நவ ஜீவன் எக்ஸ்பிரஸ்” சென்னையிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் ட்ரெயின் அது. எட்டு மணி நேரம் முதல் இருபத்தி நான்கு மணி நேரம் வரை தாமதமாக வரும் வண்டி அது. சரியான நேரத்தில் அது வந்ததாக சரித்திரமே கிடையாது என்பார்கள்.

1994 ல் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. “எந்த ஒரு கோட்டமும்  நவஜீவன் எக்ஸ்பிரஸில் முன் பதிவு செய்ய வேண்டாம்” என்று அப்போது அகில இந்திய தலைமை எல்லா கோட்டங்களுக்கும் கடிதமே எழுதியிருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் சிறப்பை.

கடந்த 22.04.2022 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போது நவ ஜீவன் எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கு வந்து சேரும் என்று முன்னே இருந்த தகவல் பலகை சொன்னது. எத்தனை மணிக்கு வர வேண்டிய வண்டி என்று விசாரித்துப் பார்த்தால் வர வேண்டிய நேரமே 5 மணிதான் என்பது தெரிந்தது. அது போலவே சரியாக 5 மணிக்கு வந்து விட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகவே சரியாக வந்து விடுகிறது என்று ரயில் நிலையத்தில் சொன்னார்கள்.

எப்படி இருந்த ட்ரெயின் இப்படி ஆயிடுச்சே . . .

கடைசியாக சொன்னது கரெக்டுதான்.

 


பெரும் செல்வந்தர்களும் அவர்தம் சொத்துக்களும்

 


முகநூலில் பார்த்ததை தமிழில் அளித்துள்ளேன்.

 

செல்வந்தரின் பெயர்

முக்கியமான சொத்துக்கள்

இலன் மஸ்க்

ட்விட்டர் & டெஸ்லா

ஜெஃப் பேசோஸ்

அமேசான்

மார்க் ஸூகர்பெர்க்

முகநூல் & இன்ஸ்டாகிராம்

கௌதம் அதானி

இந்தியப் பிரதமர்

 

ஆமாம். கடைசியாக சொன்னது கரெக்டுதான்.

 

Wednesday, April 27, 2022

APP ஐ நம்பினால் . . .


புகைவண்டி வருகை, தாமதம் ஆகியவை குறித்து அறிய RAILYATRI எனும் APP ஐ பயன்படுத்துகிறேன்.

பொதுவாக அதில் கிடைக்கும் தகவல் சரியாகவே இருக்கும். ஆனால் கடந்த 22.04.2022 அன்றைக்கு அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

சென்னை சென்ட்ரலில்  காலை 6 மணிக்கு மைசூர் செல்லும் சதாப்தி புறப்பட வேண்டும். நான் காட்பாடியில் இறங்க வேண்டும் என்பது வேறு விஷயம்.

ஆறே கால் மணி வரை ரயில் புறப்படவில்லை. சரி ரயில்யாத்ரி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் அதன் படி ஒரு நிமிடம் தாமதமாக புறப்பட்ட ரயில் 6.07 க்கெல்லாம் வில்லிவாக்கத்தை கடந்து விட்டதாகச் சொன்னது.



ஒரு வழியாக ஆறு முப்பது மணிக்கு வண்டி கிளம்ப, ஆப்போ வண்டி அம்பத்தூருக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னதாக இருப்பதாகச் சொன்னது. ஏன் இந்த குளறுபடி என்று தெரியவில்லை.

 


வண்டி சரியாக வரும் வேளையில்  தாமதமாக வருகிறது என்று ஆப் சொல்லி அதை நம்பி தாமதமாக ரயில் நிலையத்துக்கு வந்தால் என்ன ஆகும்?

 ஆப்பை பார்க்காமல் சரியான நேரத்துக்கு ரயில் நிலையம் செல்வதே மேல்.

 பிகு : அன்று காலை சென்னை சென்ட்ரல்  நிலையத்தில் அமர்ந்து கொண்டு தகவல் பலகைகளை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதையும் எழுதுவேன்.

  

குடி கெடுக்கும் கூட்டணி

 





மேலே உள்ள படங்கள்  என்னவென்று புரியவில்லையா? 

கீழே உள்ள படம்தான் மேலே உள்ளவையும்.



பெரும் பொய்யன் மாரிதாஸ் ஒரு நச்சுப்பாம்பு. தரகுப்புயல் தமிழருவி மணியனோ ஒரு நரி.

கோட்சேவை கொண்டாடுகிற, மகாத்மா காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் மாரிதாஸும் காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொழில் நடத்தும் தரகுப்புயலும் இணைந்தால் என்னென்ன நாச வேலைகளை அரங்கேற்றுவார்களோ? கேடு கெட்ட கூட்டணி இது.

தரகுப்புயலை முதன் முதலில் ஒன்பது வருடங்களுக்கு முன்பு கண்டித்து எழுதினேன். 

கீழே அந்த பதிவின் தலைப்பிலேயே இணைப்பை அளித்துள்ளேன்.

தரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்

அந்த  பதிவிற்கு கடுமையான எதிர்வினைகள் வந்தன. ஆனால் காலம் நான் சொன்னதுதான் சரி என்பதை நிரூபித்து விட்டது. (பல சந்தர்ப்பங்களிலும் என் மதிப்பீடு சரியாகத்தான் இருந்துள்ளது. மற்றவர்களுக்குத்தான் புரிந்து கொள்ள கால தாமதமாகிறது) 

(அந்த பதிவை புதுவையிலிருந்து வெளி வந்த "நமது மனசாட்சி" என்ற பத்திரிக்கை பாமரன் என்ற பெயரில் வெளியிட்டதும் ஏனய்யா எனது பெயரை வெளியிடவில்லை என்றதற்கு அந்த டுபாக்கூர் ஆசிரியர் மனசாட்சியில்லாமல் பதில் சொன்னதும் நினைவுக்கு வந்தது)

கடைசியாக தரகுப்புயலுக்கு ஒரு கேள்வி

தகதகன்னு மின்னறீங்களே. புது இடத்தில கவனிப்பு பலமோ!!!!

Tuesday, April 26, 2022

20,000 என கதையளந்தவர் வெட்கப்பட . . .

 


எங்கள் மதுரைத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் எழுதிய பதிவு. உலகின் முதல் புரட்சித்தலைவர் தோழர் லெனின் வாசித்த இந்திய நூல்களைப் பற்றி மட்டுமல்ல, அவரது வாசிப்பு உலகம் பற்றியும் பதிவு சொல்கிறது.

20,000 புத்தகங்களை படித்ததாக கதையளந்த ஆட்டுக்காரர் இப்பதிவைப் படித்து வெட்கத்தில் தலை குனிய வேண்டும்.


லெனினும் இந்தியப் புத்தகங்களும்

.சுப்பாராவ்

இந்திய தேசியக் காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி, அனைத்து காங்கிரஸ் மாநாடுகளின் வரவேற்புரை, தலைமையுரை, தீர்மானங்கள், முக்கியமான தலைவர்களின் உரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் போடப்பட்ட ஒரு புத்தகமும் உண்டு. இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சென்னையின் ஜி.. நடேசன் & கோ என்பது சுவாரஸ்யமானது.

லெனின் ஒரு புத்தகக் காதலர் என்பதும், ஒரு பிறந்த நாளுக்கு புத்தகங்கள்தான் பரிசாக வேண்டும் என்று அவர் சொன்ன போது அவருக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன என்றும் நாம் படித்திருக்கிறோம். லெனினுக்கு இந்தியா மீது தனி அக்கறை உண்டு. இந்தியாவின் சமகால நிகழ்வுகளை அவர் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். இந்தியாவை, அதன் பிரச்சனைகளை அறிந்து கொள்ள அவர் இந்தியா பற்றி அவரது காலத்தில் வெளியான புத்தகங்களையும் உடனுக்குடன் படித்து முடித்தார் என்பது வியப்பான செய்தி.

லெனின் இன் இண்டியா என்று ஆனந்த குப்தா எழுதிய அருமையான நூலில் லெனினது நூலகம் பற்றியும், அதில் இந்தியா பற்றி அவர் சேகரித்து, படித்து முடித்த நூல்கள் பற்றியும் மிகச் சுவையான, அரிய தகவல்கள் உள்ளன. பொதுவாகவே, லெனின் தன்னைச் சந்திக்கும் இந்தியா்களிடம், ‘இந்தியாவிற்குச் சென்று, வர்க்கப் போராட்டம் பற்றி பிரச்சாரம் செய்யுங்கள்’, என்பாராம். ‘இந்தியாவில் விவசாயிகள் சங்கங்கள் ஏதேனும் இருந்தால், அவை பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரியுங்கள்என்பாராம். ஐரோப்பாவில் இருந்த இந்தியர்களை அவர் இந்தியச் சூழல் பற்றி நிறைய எழுதவேண்டும் என்று வேண்டுவார். தமது மக்களையும் இந்தியா பற்றி நிறைய படிக்க வேண்டும் என்பாராம். 1921இல் அபனி முகர்ஜி மலபார் போராட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதி லெனினுக்கு அனுப்பியிருக்கிறார். ‘மிக அருமைஎன்று சொல்ல முடியாது என்றாலும் கூட, இந்தியத் தோழர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் நாம் நிறைய இடம் தரவேண்டும் என்ற குறிப்போடு, அதை பிராவ்தாவில் பிரசுரிக்க அனுப்பினார் லெனின்.

1921 பிப்ரவரி 14ஆம் நாள் அப்துல் ராப் பெஷாவரி லெனினைச் சந்தித்து அரை மணி நேரம் உரையாடினார். அப்போது லெனின் இந்தியாவைப் பற்றி தான் அறிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தருமாறு கேட்டார். அப்துல் ராப் 38 புத்தகங்கள் கொண்ட ஒரு பட்டியலை பிப்ரவரி 16ஆம் தேதி லெனினுக்கு அனுப்பினார். மறுநாளே. லெனின் லண்டனில் சோவியத் வர்த்தகக் குழுவின் தலைவராக இருந்த எல்.பி.கிராசினுக்கு அந்தப் புத்தகங்களை வாங்கி அனுப்புமாறு கடிதம் எழுதினார்அவற்றில் சில லண்டனிலும், சில இங்கிலாந்திலும் வாங்கப்பட்டன. அதில் இந்திய தேசியக் காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி, அனைத்து காங்கிரஸ் மாநாடுகளின் வரவேற்புரை, தலைமையுரை, தீர்மானங்கள், முக்கியமான தலைவர்களின் உரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் போடப்பட்ட ஒரு புத்தகமும் உண்டு. இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சென்னையின் ஜி.. நடேசன் & கோ என்பது சுவாரஸ்யமானது.

1918 மார்ச் முதல் 1922 டிசம்பர் வரை லெனின் வசித்து வந்த வீடு புத்தகக் காதலர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். எளிமையான அந்த வீட்டில், சுவர்களின் ஒரு அங்குல இடத்தையும் வீணடிக்காது, லெனின் சேகரித்து, படித்த புத்தகங்களை நிரப்பியிருக்கிறார்கள். அதுபோக, சுழலும் புத்தக அலமாரிகள் பலவற்றிலும் மேலும், மேலும் புத்தகங்கள்.

லெனினது இருக்கைக்குப் பின்பக்கத்தில் லாலா லஜபதி ராய் எழுதிய இங்கிலாண்ட்ஸ் டெப்ட் டு இண்டியா, .சி.மஜும்தார் எழுதிய இண்டியன் நேஷனல் எவெல்யூஷன், ரிப்போர்ட்ஸ் அண்ட் ரெசல்யூஷன்ஸ் அண்ட் பிரெசிடென்ஷியல் அட்ரஸஸ் ஆப் இண்டியன் நேஷனல் காங்கிரஸ் என்ற இரு முக்கியமான புத்தகங்கள். அவற்றை அக்காலத்தில் இங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களே படித்திருப்பார்களோ, என்னமோ, நம் தோழர் படித்து விட்டார்!லெனினது அந்த நூலகத்தின் கேட்லாக் மட்டுமே 800 பக்கங்கள்! இதில் 8400க்கும் அதிகமான புத்தகங்கள்! இவற்றில் இந்திய அரசியல், இலக்கியம், மதம் சார்ந்த நூல்கள் நிறைய உண்டு. இவற்றில் தாகூர் எழுதிய புத்தகங்களும், தாகூரைப் பற்றிய புத்தகங்களும் அதிகம். காரணம், லெனினது நெருங்கிய நண்பர்களான மக்சிம் கார்க்கியும், கல்வியமைச்சர் லுனாசார்ஸ்கியும் தாகூரின் மிகப் பெரிய ரசிகர்கள். எம்.என்.ராய் எழுதிய நூல்கள் நிறைய இருந்தன. அவற்றில் பல எம்.என்.ராய் தானே லெனினுக்குப் பரிசாகத் தந்தவை. ஸ்பீச்சஸ் அண்ட் ரைட்டிங்ஸ் ஆஃப் சுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திர பால் எழுதிய தி நியூ எகனாமிக் மெனாஸ் என்று காங்கிரஸின் அன்றைய சமகாலத் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை லெனின் படித்திருப்பது அவரது நூலகத்தைப் பார்த்தால் தெரிகிறது.

1919இல் லெனினைச் சந்தித்து உரையாடிய இந்தியப் புரட்சியாளரான ராஜா மகேந்திர பிரதாப் எழுதிய நூலான ரிலிஜன் ஆஃப் லவ் என்ற நூல் லெனினின் சேகரிப்பில் இருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தான் லெனினுக்குப் பரிசளித்தபோது, அவர் சிரித்தபடியே நான் ஏற்கனவே இதைப் படித்துவிட்டேன் என்று சொன்னதைக் கேட்டு தான் அசந்து போய்விட்டதாக மகேந்திர பிரதாப் குறிப்பிட்டுள்ளார். லெனினின் சேகரிப்பில் மகேந்திர பிரதாப்பின் நூல்கள் நிறைய உள்ளன. தாக்கூர் தயானந்த தேவ் என்ற இந்து சாமியாரின் சீடர் அலோகானந்தா மஹாபாரதி என்பவர் எழுதிய தி மாஸ்டர்ஸ் வேர்ல்ட் யூனியன் ஸ்கீம் என்ற புத்தகமும் லெனினின் நூலகத்தில் இருக்கிறது. இது இந்தியாவில் சில்சாரில் உள்ள அருணாசல் மிஷன் என்ற ஆசிரமத்தின் வெளியீடு.

இன்று இந்த புத்தகத்தை நாம் அமேஸானில் மிக எளிதாக வாங்கிவிட முடியும். நூறாண்டுகளுக்கு முன் லெனின் யாரிடம் சொல்லி வைத்து எப்படி வாங்கினாரோ? நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.1922 ஜனவரியில் லெனின் நோட்ஸ் ஆஃப் பப்ளிசிஸ்ட் என்ற நூலை எழுத ஆரம்பித்தார். அவரது பணிச்சுமை, உடல்நலம், நமது துரதிருஷ்டம் எல்லாம் சேர்ந்து அவரால் அதை முடிக்க முடியாமல் போனது. இந்த நூல் எதைப் பற்றியது என்பது பற்றிய குறிப்பில், லெனின்ஹிந்து டால்ஸ்டாயைப் பற்றிஎன்று எழுதி வைத்திருக்கிறார். அவர் குறிப்பிடுவது நமது மஹாத்மா காந்தியடிகளை என்று அறியும் போது மெய்சிலிர்க்கின்றது!

(நன்றி: கீழக்கரை.காம்)