Thursday, April 5, 2018

அந்தஸ்துக்கே கலாய்ச்சா எப்படி????



என் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு உ.பி மாதிரி  மொட்டை சாமியாரை முதல்வராக்கினேனா?

இல்லை மோடி மாதிரி ஜக்கியோடு நடனமாடினேனா?

இல்லை அவரை மாதிரி நித்தியை வணங்கி போஸ் கொடுத்தேனா?

யமுனையை சீசீ.ரவிசங்கர் நாசமாக்க அனுமதித்தேனா?

ஹரியானா முதல்வர் மாதிரி ராம்ரஹீம் சாமியாரை பாதுகாக்க முயன்றேனா?

பாலியல் வன் கொடுமை செய்த ஆசாராம் சாமியாருக்கு ஆதரவா சுஷ்மாஜி நின்றாங்களே, அந்த மாதிரி செய்தேனா?

உத்தர்கண்ட் மாநில முதல்வர் சுடிதார் சாமியார் பாபா ராம்தேவுக்கு அரசு நிலத்தை அள்ளிக் கொடுத்தேனா?

ஏதோ எனக்கு தெரிஞ்ச சில சாமியாருங்க, சுகபோகமா இருக்கட்டுமேன்னு அமைச்சர் அந்தஸ்து கொடுத்தேன். 

அதுக்குப் போய் இப்படி கலாய்க்கிறாங்களே! நியாயமா இது?

எங்க கட்சியில தியாகிகளும் அறிவாளிகளும் இருந்தா அவங்களுக்கு பதவி கொடுக்கலாம். 

அத்தனை பேருமே அயோக்கியனும் அடி முட்டாளும்தான். அப்படி இருக்கையில சாமியாரா இருந்தா என்ன? சாதாரண லூஸா இருந்தா என்ன? 

                -----  ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகானின் மைண்ட் வாய்ஸ்


1 comment:

  1. இவனுங்க மூஞ்சியைப் பாத்தா பக்கா திருடனுங்க மாதிரிதான் இருக்கு.
    ஜெயில்ல போட வேண்டிய ஆசாமிங்களுக்கு மந்திரி அந்தஸ்தா?
    கொடுமைடா சாமி

    ReplyDelete